ஓசூர் அருகே சூடுகொண்டப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த நந்தீஸ் - சுவாதி ஆகியோர் சாதிமறுப்புத் திருமணம் செய்துகொண்டதால், பெண் வீட்டார் 2018ஆம் ஆண்டு நவம்பர் மாதம், இருவரையும் கடத்தி படுகொலை செய்தனர். இச்சம்பவம் தமிழ்நாட்டில் பல்வேறு பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது.
இந்நிலையில் சூடுகொண்டப்பள்ளி கிராமத்தில் வசித்துவரும் நந்தீஷ் குடும்பத்தினரின் வீட்டிற்கு இதுவரை பட்டா வழங்காமலிருந்ததாக மாவட்ட ஆட்சியரிடம் முறையிட்டிருந்தனர். இதனையடுத்து மாவட்ட ஆட்சியரின் உத்தரவின்படி, நந்தீஸ் குடும்பத்தார் தங்கி இருக்கும் வீட்டிற்கான இலவச பட்டாவினை, ஓசூர் வட்டாட்சியர் பாலசுப்பிரமணியம் நேரில் அழைத்து வழங்கினார். பட்டாவைப் பெற்றுக்கொண்ட நந்தீஸ் குடும்பத்தினர் அலுவலர்களுக்கும், தமிழ்நாடு அரசிற்கும் நன்றிகளைத் தெரிவித்துக்கொண்டனர்.