ETV Bharat / state

அலுவலர்களின் அலட்சியம்: வீணாகும் குடிநீர்! - கங்கலேரி

கிருஷ்ணகிரி: கங்கலேரி கிராமத்தில் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்ட நீரை சேமித்துவைக்கும் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியின் குழாய் உடைந்து பல ஆயிரம் லிட்டர் குடிநீர் சாலையில் வீணாவதால் அப்பகுதி மக்கள் வேதனை அடைந்துள்ளனர்.

அதிகாரிகளின் அலட்சியத்தால் வீணாகும் குடிநீர்
author img

By

Published : May 26, 2019, 11:04 AM IST

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அன்றாடத் தேவைகளுக்காகப் பயன்படுத்தப்படும் குடிநீர் தட்டுப்பாடு, மாவட்டம் முழுவதும் மிகுந்து காணப்படுகிறது. இதனால் கிராம மக்கள் பல மைல் தூரம் நடந்தே சென்று தண்ணீரைப் பிடித்து வந்து பயன்படுத்துகின்றனர்.

இந்நிலையில் கங்கலேரி கிராமத்தில் மலை சந்து என்னுமிடத்திலுள்ள ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்ட நீரை சேமித்து வைக்கும் தொட்டியிலிருந்து குழாய் உடைந்து பல ஆயிரம் லிட்டர் தண்ணீர் சாலையில் வெள்ளம்போல் ஓடுகிறது.

வீணாகும் குடிநீர்

இதனை உடனடியாக சரி செய்ய வேண்டும் என்று அப்பகுதி மக்கள் நகராட்சிக்கு கோரிக்கை வைத்துள்ளனர். தண்ணீரை காசு கொடுத்து வாங்கிக் கொண்டிருக்கும்போது, அலுவலர்களின் அலட்சியத்தால் தண்ணீர் வீணாவது அப்பகுதி மக்களை வேதனை அடையச் செய்துள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் கங்கலேரி கிராமத்தில் அதிகாரிகளின் அலட்சியத்தால் வீணாகும் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்ட குடிநீர்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அன்றாடத் தேவைகளுக்காகப் பயன்படுத்தப்படும் குடிநீர் தட்டுப்பாடு மாவட்டம் முழுவதும் மிகுந்து காணப்படுகிறது. இதனால் கிராம மக்கள் பல மைல் தூரம் நடந்தே சென்று தண்ணீர் பிடித்து வந்து பயன்படுத்துகின்றனர். இன்னும் சில மலைக்கிராமங்களில் தண்ணீர் தட்டுப்பாடு மிகவும் அதிகமாக காணப்படுகிறது குறிப்பாக ஏக்கல் நத்தம் மலைக்கிராமத்தில் அன்றாடத் தேவைகளுக்கு பயன்படும் சமைப்பதற்கு குடிப்பதற்கு தண்ணீர் இல்லாமல் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர்.
இத்தகைய நிலை இருக்கும் பொழுது தற்பொழுது கங்கலேரி கிராமத்தில் மலை சந்து என்னுமிடத்திலுள்ள கூட்டு குடிநீர் திட்ட நீர் சேமித்து வைக்கும் தொட்டியிலிருந்து குழாய் உடைந்து பல ஆயிரம் லிட்டர் தண்ணீர் சாலையில் வெள்ளம்போல் ஓடுகிறது.
தண்ணீரை விலை கொடுத்து வாங்கிக் கொண்டிருக்கும் தற்போதைய நிகழ்காலத்தில் அதிகாரிகளின் அலட்சியம் மற்றும் மெத்தனப்போக்கால் இத்தகைய நிலைமை ஏற்படுவது அப்பகுதி மக்களிடையே அதிருப்தி அடையச் செய்துள்ளது. அவ்வூர் பொதுமக்கள் கூறும்போது கிட்டத்தட்ட 5 மணி நேரமாக தண்ணீர் இவ்வாறு சாலையில் புரண்டு ஓடுகிறது இதனை தொடர்புடைய அதிகாரிகள் கண்டு குழாய் உடைப்பு ஏற்பட்ட இடத்தை சரி செய்ய வேண்டும்.சரி செய்து அன்றாட தேவைகளுக்கு சீரான அளவில் தண்ணீர் விடுவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று தெரிவித்தனர்.

Visual on ftp
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.