கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டம் ஒசூரில் அதிமுகவின் செயல் வீரர், வீராங்கணைகள் கூட்டமானது முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி தலைமையில் நடைபெற்றது. இதில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை, கிராமங்கள் தோறும் இனிப்புகள் வழங்கி, ஏழை எளியோருக்கு நலத்திட்ட உதவிகள் கொடுத்து கொண்டாட வேண்டும் எனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதையடுத்து மார்ச் 4ஆம் தேதியன்று கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அரசு மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு, சிறப்பான வரவேற்பு அளிப்பது குறித்த தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.
இந்நிகழ்ச்சியில் பேசிய பாலகிருஷ்ணா ரெட்டி, ”மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, தமிழ்நாட்டிற்கு நல்லாட்சியை மட்டுமல்ல; முதலமைச்சரையும், துணை முதலமைச்சரையும் ராமன், லட்சுமணனாக கொடுத்துவிட்டுச் சென்றிருப்பதாகப் புகழாரம் சூட்டினார்.
இதையும் படிங்க:ஆபாச பேச்சு, நிர்வாண விடியோ கால், உல்லாசம்: மன்மத லீலையில் திளைத்த வங்கி காசாளருக்கு வலைவீச்சு!