கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சானமாவு வனப்பகுதியில் 30 யானைகள் இடம்பெயர்ந்து சுற்றி வருவதால், வனப்பகுதியை ஒட்டிய கிராம மக்களுக்கு வனத்துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கர்நாடகா மாநிலம் பன்னார்கட்டா வனப்பகுதியில் இருந்து வெளியேறிய 100க்கும் மேற்பட்ட யானைகள் தமிழ்நாடு எல்லையான ஜவளகிரி வனச்சரக பகுதிக்கு கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு இடம்பெயர்ந்தன.
அவற்றை வனத்துறையினர் கண்காணித்து வரும் நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் 30-க்கும் மேற்பட்ட யானைகள் மட்டும் தனியாக பிரிந்து குந்துக்கோட்டை, ஈருசெட்டி ஏரி வழியாக தேன்கனிக்கோட்டை வனப்பகுதிக்கு இடம் பெயர்ந்துள்ளன.
மேலும், வனப்பகுதியிலிருந்து வெளியேறிய 30-க்கும் மேற்பட்ட யானைகள் ஓசூர் சானமாவு வனப்பகுதிக்கு இடம் பெயர்ந்துள்ளதால், வனப்பகுதியை சுற்றியுள்ள ராமாபுரம், குக்கலப்பள்ளி, பீர்ஜேப்பள்ளி, சானமாவு உள்ளிட்ட கிராம மக்கள் வனப்பகுதிக்குள் விறகு சேகரிக்கவோ, ஆடு, மாடு மேய்க்கவோ செல்ல வேண்டாம் என்றும், விவசாயிகள் இரவு காவலுக்கோ, அதிகாலை நேரத்திலோ விவசாய நிலங்களுக்கு செல்ல வேண்டாம் என வனத்துறை சார்பில் எச்சரிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: பள்ளி மரங்களை வெட்டும் தலைமையாசிரியர் - நடவடிக்கை எடுக்கக் கோரும் பொதுமக்கள்!