ETV Bharat / state

கேஆர்பி அணையின் பழுதடைந்த மதகுகளைச் சீர் செய்யுமாறு கோரிக்கை...!

கிருஷ்ணகிரி:கேஆர்பி அணையின் பழுதடைந்த மதகுகளை விரைவில் சீர் செய்து தருமாறு தமிழ்நாடு விவசாயிகள் சங்க இயக்கக் கூட்டமைப்பினர் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்க இயக்கக் கூட்டமைப்பு
author img

By

Published : Apr 14, 2019, 9:02 AM IST

இது குறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்க இயக்கக் கூட்டமைப்பு பொதுச் செயலாளர் இராம கவுண்டர் கிருஷ்ணகிரியில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியதாவது, 'கடந்த 60 ஆண்டுகளாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இரு போகம் சாகுபடி செய்து வந்தோம். தற்போது ஒருபோக சாகுபடிக்குக் கூட வழியில்லை. அந்த அளவுக்கு தண்ணீர் வறண்டு போய்விட்டது.

தமிழ்நாடு விவசாயிகள் சங்க இயக்கக் கூட்டமைப்பு

தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள கேஆர்பி அணையில் ஆறு மதகுகள் சரிவர பராமரிக்கப்படவில்லை. எனவே இரண்டாம் போக சாகுபடி முடியும் முன்பு அதனைச் சரி செய்யுமாறு ஏற்கனவே கோரிக்கை விடுத்தோம். ஆனால் இதுவரையில் செய்யாமல் இருப்பது வருத்தத்தை அளிக்கிறது. இதனால் தண்ணீர் வீணாகிறது. அரசு கால்வாய் அமைத்துத் தருவதாகக் குறிப்பிட்டது. ஆனால், கால்வாய் பணி தொடங்க இன்னும் தாமதம் ஆகிறது.

எனவே பழுதடைந்த மதகுகளையும், கிடப்பில் போடப்பட்ட கால்வாய் பணிகளையும் மாவட்ட நிர்வாகமும், தமிழ்நாடு அரசும் விரைந்து சீர் செய்ய வேண்டும். இன்னும் 15 நாட்களுக்குள் தொடர்புடைய பராமரிப்பு பணிகள் நடைபெறாவிட்டால் தமிழ்நாடு விவசாயிகள் சங்க இயக்க கூட்டமைப்பு சார்பில் மிகப்பெரிய போராட்டம் நடைபெறும்' என தெரிவித்தார்.

Intro:தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள கேஆர்பி அணையின் மதகுகள் பழுதடைந்த நிலையில் உள்ளதால் விரைவில் சீர் செய்து கொடுக்க மாவட்ட நிர்வாகத்திற்கும் தமிழக அரசுக்கும் தமிழ்நாடு விவசாயிகள் சங்க இயக்கக கூட்டமைப்பு பொதுச் செயலாளர் இராம கவுண்டர் அவர்கள் கிருஷ்ணகிரியில் செய்தியாளர்களுக்கு பேட்டி

Body:கர்நாடக அரசு கடந்த 2 ஆண்டுகளாக தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தென்பெண்ணை ஆற்றில் சாக்கடை கிடைத்தது என்று பிரச்சாரம் செய்து போராடியதன் விளைவு 4000 கோடி ரூபாயில் பெங்களூர் சாலையை சுத்தம் செய்து 2000 குதிரைத்திறன் கொண்ட பம்பு செட்டுகளை பயன்படுத்தி தண்ணீரை உறிஞ்சிக் கொண்டு இருக்கிறார்கள். கடந்த 60 ஆண்டுகளாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இரு போகம் சாகுபடி செய்து வந்தோம் ஒருபோக சாகுபடி கூட வழியில்லை அந்த அளவுக்கு தண்ணீர் வறண்டு போய்விட்டது கிருஷ்ணகிரி மாவட்ட தென்பெண்ணை ஆற்றில் மற்றும் கேஆர்பி அணையில். இதற்கு முக்கிய காரணம் தமிழக மக்கள் விவசாயிகள் சேர்ந்து மற்ற கட்சிகளுடன் சேர்ந்து கொண்டு போராட்டம் செய்த விளைவாக தான் தற்போதைய கர்நாடக அரசு சேர்ந்துகொண்டு தண்ணீர் தர மறுத்து வருகிறது. இத்தகைய தண்ணீர் உறிஞ்சும் முறை மற்றும் கழிவுநீர் ஆற்றில் கலந்தது போன்ற செயல்களில் ஈடுபடுகின்ற கர்நாடக அரசை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம்.
60 நாட்கள் மட்டுமே தண்ணீர் கொடுத்தால் போதும் நாங்கள் இரண்டாவது போக சாகுபடி செய்து விடுவோம் என்று மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழக அரசிடம் கோரிக்கை விடுத்தும் அதை ஏற்றுக்கொண்டு மாவட்ட நிர்வாகமும் தமிழக அரசும் நிபந்தனைகளுடன் குறிப்பாக திடீரென்று பயிர்கள் வறண்டு போய் விட்டால் இழப்பீடு கேட்க மாட்டோம் என்று எழுதிக் கொடுக்கச் சொன்னார்கள் அதனையும் எழுதி கொடுத்து நிபந்தனையை ஏற்று தண்ணீரைப் பெற்று தற்போது இரண்டாம் போக சாகுபடிக்கு இறுதி நிலையாக பயிர்கள் அறுவடை நிலைக்கு தயார் நிலையில் உள்ளது அதற்காக மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழக அரசுக்கு நாங்கள் நன்றி தெரிவிக்கிறோம் என்றார்.
தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள கேஆர்பி அணையின் மதகுகள் தரமற்று இருந்ததால் அதனை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நான்கு கோடி ரூபாயில் புதிதாக செய்து பொருத்தினார்கள் மீதமுள்ள ஆறு மதகுகளும் இன்னும் சரிவர பராமரிக்கப்படவில்லை இரண்டாம் போக சாகுபடி முடியும் முன்பே ஏப்ரல் மாதத்திலிருந்து ஜூலை மாதத்துக்குள் பருவமழை தொடங்குவதற்கு எங்களுக்கு உடைகளை சரி செய்து தாருங்கள் என்று கோரிக்கை விடுத்தோம் இதுவரையில் செய்யாமல் இருப்பது வருத்தத்தை அளிக்கிறது என்று அவர் கூறினார்.
தற்போது உள்ள மதகுகளில் மூன்று மதகுகள் ரப்பர் பகுதி செயலிழந்து பிடுங்கிக்கொண்டு தண்ணீர் சென்றுகொண்டே இருக்கிறது இதனால் தண்ணீர் வீணாக செல்கிறது மற்றும் கால்வாய் அமைத்து தருவதாகவும் குறிப்பிட்டார்கள் கால்வாய் பணி தொடங்கும் இன்னும் தாமதம் ஆகிறது மேலும் இத்தகைய பணிகளை விவசாயிகளுக்கு ஏற்றார்போல் விவசாயம் செய்வதற்கு செய்து தராவிட்டால் இன்னும் 15 நாட்களுக்குள் தொடர்புடைய பராமரிப்பு பணிகள் நடைபெறாவிட்டால் தமிழ்நாடு விவசாயிகள் சங்க இயக்க கூட்டமைப்பு மிகப்பெரிய போராட்டத்தில் ஈடுபடும் என்று ராம கண்ட அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.