கிருஷ்ணகிரியில் தனியார் பல்கலைக்கழக நிறுவனர் விஸ்வநாதன் தலைமையில், 'சூட்டி மகிழ்வோம், தூய தமிழ்ப் பெயர்கள்' நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்நூலை மாநில பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் வெளியிட , மாநில உயர்கல்வித் துறை அமைச்சர் அன்பழகன் பெற்றுக் கொண்டார்.
பின்னர் விழாவில் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், 'உலகத்தில் எங்கெல்லாம் தமிழர்கள் வாழ்கிறார்களோ அவர்களின் பிள்ளைகள் தமிழை எளிதில் கற்றுக் கொடுக்கும் நோக்கில் வீடுதோறும் ஒளிபரப்பும் வகையில் கல்வித் தொலைக்காட்சி மேம்படுத்தப்படும். 37 ஆயிரம் அரசு பள்ளிகளிலும் தமிழை நன்கு கற்றுக்கொடுக்க ஓய்வுப்பெற்ற ஆசிரியர்களைக் கொண்டு, வகுப்பு எடுக்க முதலமைச்சருடன் ஆலோசனை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க உள்ளோம். மேலும் தமிழ்நாட்டில் தமிழைப் பாதுகாக்கவும், பயிற்றுவிக்கவும் போதிய நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.
இதையும் படிக்கலாமே: ’மனித உரிமைக் கல்வியை மாணவர்களுக்கு கற்றுத்தர வேண்டும்’ - ஐநாவில் பேசிய மாணவி