கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட திமுக சார்பில் புதிய பேருந்து நிலைய, அண்ணா சிலை முன்பாக இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் செங்குட்டுவன் தலமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், நகர செயலாளர் நவாப், முன்னாள் மக்களவை உறுப்பினர் எம்.பி. சுகவனம், உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
தமிழநாட்டில், தலை விரித்தாடும் தண்ணீர்ப் பஞ்சத்திற்குக் காரணமான உள்ளட்சித் துறை அமைச்சர் பதவி விலக வேண்டும். குடிநீரின்றி தவிக்கும் மக்களுக்கு தண்ணீர் தர மறுக்கும் எடப்பாடி பழனிச்சாமி பதவி விலக வேண்டும். தண்ணீர் இல்லாமல் அலையும் மக்களுக்கு சீரான முறையில் தண்ணீர் வழங்க தமிழக அரசு முன் வரவேண்டும் என்று அவர்கள் கோஷங்களை எழுப்பினர்.