கிருஷ்ணகிரியில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் சார்பாக மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் சாந்தியிடம் குடிநீர் வசதி, மின்வசதி, பட்டா, கல்வி உதவித் தொகை, ஓய்வூதியத் தொகை, இலவச தையல் எந்திரம், சலவைப் பெட்டி வேண்டி பொதுமக்கள் மனு அளித்தனர்.
மேலும் சாலை வசதி வேண்டியும், மின் இணைப்பு, வீட்டுமனைப் பட்டா என மொத்தம் 245 மனுக்களைப் பெற்றுக்கொண்ட மாவட்ட வருவாய் அலுவலர், சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அறிவுரை வழங்கினார்.
மாற்றுத்திறனாளிகள் நலத் துறை சார்பாக மாற்றுத்திறனாளிகளுக்கான திருமண நிதி உதவி வழங்கும் திட்டத்தின் கீழ் 15 பயனாளிகளுக்கு 8 கிராம் தங்க நாணயம், 23 பயனாளிகளுக்கு நலவாரிய திட்டத்தின்கீழ் இரண்டு லட்சத்து 66 ஆயிரம் ரூபாய்க்கான காசோலையை மாவட்ட வருவாய் அலுவலர் வழங்கினார்.
இதையும் படிங்க: ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றம்