கர்நாடக மாநிலம், தென்பெண்ணையாற்றின் நீர்பிடிப்பு பகுதிகளான நந்திமலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் நீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் ஓசூர் கெலவரப்பள்ளி அணை, கிருஷ்ணகிரி கேஆர்பி அணை உள்ளிட்ட அணைகளின் நீர் மட்டம் உயர்ந்து வருகிறது.
தொடர் மழையால் ஏற்பட்டுள்ள நீர் வரத்து காரணமாக தருமபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை உள்ளிட்ட 6 மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
தென்பெண்ணையாற்றில் நீர் வரத்து காரணமாக ஓசூர் கெலவரப்பள்ளி தற்போது 960 கனஅடி நீர் வரத்து உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 44.28 அடியாகும். தற்போது அணையின் நீர்மட்டம் 40.34 அடியாக உள்ளது. அணையின் பாதுகாப்பு மற்றும் விவசாயம் குடிநீர் ஆகிய காரணங்களுக்காக தென்பெண்ணையாற்றின் வழியாக கேஆர்பி அணைக்கு 960 கனஅடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது.
இதுஒருபுறம் இருக்க கர்நாடகா மாநிலத்திலிருந்து தென்பெண்ணையாற்றின் வழியாக தொழிற்சாலை ரசாயன கழிவுகள் தொடர்ந்து ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருவதால், தண்ணீர் நிறம் மாறி கடும் துர்நாற்றத்துடன் நுரைகள் பொங்கி செல்கிறது.
கடந்த சில நாள்களாக இந்த ரசாயன கழிவுகள் ஆற்றில் நுரைகளுடன் அதிக அளவு நுரைகளுடன் வெளியேறி வருகிறது.
இதனால் கடந்த இரு நாள்களுக்கு முன்பு தேசிய பசுமை ஆணையம் தானாக முன் வந்து, தென்பெண்ணை ஆற்றின் நீரை ஆய்வு செய்து, நுரையுடன் வரும் தண்ணீரை பரிசோதனைக்காக எடுத்துச் சென்றுள்ளனர்.
இதையும் படிங்க: படையெடுத்து வந்த வவ்வால் கூட்டம் - அச்சத்தில் மக்கள்