கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகே உனிசெட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணன். இவர் தனது குடும்ப நகைகளை வங்கியில் அடமானம் வைத்து, அதன் மூலம் வந்த பணத்தைக் கொண்டு ஒன்றரை ஏக்கருக்கும் மேலாக உள்ள விவசாயத் தோட்டத்தில் தக்காளிப் பயிர்களை முதன்முதலாக விவசாயம் செய்து வந்தார்.
இந்நிலையில் இரவு திடீரென அவரது தக்காளித் தோட்டத்திற்குள் யானைகள் கூட்டமாக புகுந்து, பயிர்களை நாசம் செய்தது. இதில் சுமார் 50 ஆயிரத்திற்கும் மேல் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். தற்போது அய்யூர் வனப்பகுதியில் பத்துக்கும் மேற்பட்ட யானைகள் சுற்றித் திரிகிறது.
இதனால் அடிக்கடி இரவு நேரங்களில் ஊருக்குள்ளும், விவசாய நிலங்களிலும் யானைகள் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றது. எனவே, தனக்கு உரிய நஷ்ட ஈட்டை அரசு வழங்க வேண்டும் என பாதிக்கப்பட்ட விவசாயி அரசுக்குக் கோரிக்கை வைத்துள்ளார்.
எனவே, வனத்துறை சார்பாக ஒலிப்பெருக்கி, தண்டோரா மூலமாகவும்; வனப்பகுதியை ஒட்டியுள்ள மேலூர், குள்ளட்டி, தொளுவபெட்டா, தோட்டிகுப்பம் ஆகிய வனப்பகுதியை ஒட்டியும் உள்ள கிராம மக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி வனத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதையும் படிங்க: வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தீயணைப்பு வீரர்கள் தயார்!