தமிழ்நாட்டில் கரோனா தொற்று நோயின் பாதிப்பை தடுக்க மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்தத் தடை உத்தரவினால் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தினக்கூலிக்கு செல்லும் மக்களின் வாழ்வாதாரம் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது.
இதனால் முற்றிலும் வருமானமின்றி வீட்டில் உணவுக்கு பஞ்சம் ஏற்படும் அளவுக்கு சூழ்நிலை மோசமாகியுள்ளது. இதனையடுத்து கிருஷ்ணகிரி மாவட்டம் திமுக மகளிர் அணி சார்பில் நிவாரணப் பொருள்கள் வழங்கப்பட்டன.
மாவட்ட திமுக மகளிர் அணி அமைப்பாளர் திருமதி பரிதா நவாப் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட திமுக கிழக்கு மாவட்ட செயலாளர் செங்குட்டுவன் 600 குடும்பங்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருள்களான 5 கிலோ அரிசி, துவரம் பருப்பு, சமையல் எண்ணெய், சர்க்கரை, காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்கள் மற்றும் முகக்கவசங்களை வழங்கினார்.
இந்த நிவாரணம் வழங்கும் நிகழ்வில் திமுக நகர கழக செயலாளர் நவாப், மாவட்ட பிரதிநிதி சொந்தராஜன், கனல் சுப்பிரமணி உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.
இதையும் படிங்க: ’வெளியே சுற்றினால் கரோனா பரிசோதனை’