ETV Bharat / state

மறைந்த வசந்தகுமாருக்கு நினைவேந்தல் நிகழ்ச்சி! - கிருஷ்ணகிரி மாவட்டம்

கிருஷ்ணகிரி: தனியார் திருமண மண்டபத்தில் மாவட்ட வர்த்தக பிரிவு சார்பாக மறைந்த வசந்தகுமாருக்கு நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.

Commemoration program for the late Vasanthakumar in Krishnagiri

author img

By

Published : Sep 10, 2020, 11:08 PM IST

கிருஷ்ணகிரி மாவட்ட காங்கிரஸ், மாவட்ட வர்த்தக பிரிவு சார்பில் கன்னியாகுமரி காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினரும் வர்த்தகப் பிரிவு தலைவருமான மறைந்த வசந்தகுமாருக்கு நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.

தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற இந்த நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு மாவட்ட வர்த்தக அணி தலைவர் முபாரக் தலைமை வகித்தார்.

மாவட்ட தலைவர் சுப்பிரமணியன், வர்த்தக பிரிவு தலைவர் ராமசாமி, ஓசூர் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் கோபிநாத், ஜேசுதுரை, மாநில பட்டியல்பிரிவு அமைப்பாளர் ஆறுமுகசுப்பிரமணியம் உள்ளிட்ட பல பேர் பங்கேற்றனர்.

இந்நிகழ்ச்சியில் வசந்தகுமாரின் திருவுருவ படத்திற்கு மாலையிட்டு மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. முன்னதாக நினைவேந்தல் நிகழ்ச்சியில் வசந்தகுமாருக்கு அனைவரும் எழுந்து நின்று மௌன அஞ்சலி செலுத்தினர்.

இந்த நினைவேந்தல் நிகழ்ச்சியில், தமிழ்நாட்டில் காமராஜர் ஆட்சியான காங்கிரஸ் ஆட்சியை கொண்டு வருவோம், மறைந்த வசந்தகுமாரின் கனவை நனவாக்குவோம்” என்றும் உறுதிமொழி ஏற்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.