கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த பாகலூரைச் சேர்ந்தவர் நந்தினி (27). கணவரைப் பிரிந்து வசிக்கும் இவருக்கு மூன்றரை வயதில் பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த அசோக் என்பவருக்கும் இடையே மண உறவைத் தாண்டிய பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து நேற்று நந்தினி, அசோக்குடன் இணைந்து ஒன்றாக மது அருந்தியுள்ளார். பின் அவர்களுக்கு இடையூறாக நந்தினியின் குழந்தை இருக்கவே, அக்குழந்தைக்கும் மதுவை ஊட்டி அடித்து உதைத்துள்ளார்.
இதனால் வலி தாங்கமுடியாத குழந்தை கத்தி அலறவே, அருகில் வசிப்பவர்கள் காவல் துறைக்குத் தகவல் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் குழந்தையை மீட்டு, பாகலூர் சுகாதார மையத்தில் சேர்த்துள்ளனர்.
பின் குழந்தை ரத்த வாந்தி எடுக்கவே, அதன் ஆபத்தை உணர்ந்த மருத்துவர்கள் உடனடியாக குழந்தையை கிருஷ்ணகிரி மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து சிகிச்சையளிக்க ஏற்பாடு செய்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக அசோக்கை கைது செய்த ஓசூர் மகளிர் காவல் துறையினர், குழந்தையின் இரத்தக்கறைக்கு காரணம் என்ன? மண உறவைத் தாண்டிய காதலுக்கு குழந்தை தடையாக இருந்ததால் குழந்தை கொடூரமாகத் தாக்கப்பட்டாரா? உள்ளிட்ட கோணங்களில் தீவிர விசாரணையை மேற்கொண்டுள்ளனர்.
இதையும் படிங்க: 'டீசலுக்கு காசு இல்லைங்க' - திருடிய வாகனத்தை நடுரோட்டில் விட்டுச்சென்ற திருடர்கள்