ETV Bharat / state

ஆழ்துளைக் கிணறுகள் குறித்து 24 மணி நேரமும் புகாரளிக்கலாம் - ஆட்சியர் அறிவிப்பு - Notice of bore wells

கிருஷ்ணகிரி: ஆழ்துளைக் கிணறுகள் குறித்த புகார்களை தெரிவிக்க ஆட்சியர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் இயங்கக் கூடிய கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண்ணில் தொடர்புகொண்டு புகார் அளிக்கலாம் என, ஆட்சியர் பிரபாகர் தெரிவித்துள்ளார்.

Krishnagiri District Collector Notice, ஆழ்த்துளை கிணறுகள் குறித்து 24- மணி நேரமும் புகாரளிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
author img

By

Published : Oct 30, 2019, 4:36 PM IST

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், ஆழ்த்துளைக் கிணறு அமைக்கும் நில உரிமையாளர்கள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து ஊரக வளர்ச்சித்துறை, வருவாய்த்துறை, அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம் ஆட்சியர் பிரபாகர் தலைமையில் நடைபெற்றது. அப்போது, ஆழ்துளைக் கிணறு அமைக்கும் விவசாயிகள் ரூ. 100 செலுத்தி படிவம் அ-வில் பூர்த்தி செய்து, உள்ளாட்சி அமைப்புகளிடம் அளிக்க வேண்டும், அனுமதி பெற்ற பின்னரே ஆழ்துளைக் கிணறுகள் அமைக்க வேண்டும், கைவிடப்பட்ட ஆழ்துளைக் கிணறுகளில் கேசிங் பைப்களை எக்காரணம் கொண்டும் ரிக் வாகன உரிமையாளர் அகற்றக் கூடாது, அவற்றை மீறும்பட்சத்தில் வாகன உரிமையாளர்கள் மற்றும் நில உரிமையாளர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் பிரபாகர், அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் பேசுகையில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஊரக பகுதிகள், நகராட்சி, மாநகராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளில் ரிக் வாகனம் மூலம் ஆழ்துழைக் கிணறுகள் அமைக்கும் போது கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் அரசானை எண் 26 (18.2.2015) இல் தமிழ்நாடு அரசு நடைமுறைபடுத்த உத்தரவிட்டுள்ளது. அதனடிப்படையில் போர் வெல் வாகன உரிமையாளர்கள், அரசு வகுத்துள்ள விதிமுறைகளை 100 விழுக்காடு கடைபிடிக்க வேண்டும்.

குறிப்பாக அனுமதி பெறுவதற்கான விண்ணப்பப் படிவம் உ-இல் கட்டணமாக ரூ. 15 ஆயிரம் வங்கி வரைவோலை செலுத்தி மாவட்ட ஆட்சியரிடம் விண்ணப்பம் அளிக்க வேண்டும். விண்ணப்பம் பெறப்பட்ட 45 நாட்களுக்குள் அவற்றை பரிசீலனை செய்து நிபந்தனைகளுடன் அனுமதி அளிக்கப்படும். மனுவை தள்ளுபடி செய்யும் முடிவு எடுக்கும் பட்சத்தில் எழுத்துப் பூர்வமாக தகவல் தெரிவிக்கப்படும். அனுமதியின்றி போர்வெல் வாகனம் மூலம் ஆழ்துளைக் கிணறு அமைக்கக் கூடாது. போர்வெல் வாகனம் ஆழ்துழைக் கிணறு அமைத்து தண்ணீர் வராத நிலையில் கேசிங் பைப்களை கட்டாயம் அகற்றக் கூடாது. அவ்வாறு அகற்றுவது தெரியவந்தால் போர்வெல் வாகன உரிமையாளர் மீது குற்றவியியல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

கிணறு தொடர்பான பணி மேற்கொள்ளும் போது கிணற்றை சுற்றிலும் முள்கம்பி வேலி அல்லது தகுதி தடுப்பு அமைக்கப்பட வேண்டும். போர்வெல்லை சுற்றி சிமெண்ட் காரையிலான தளம், நில மட்டத்திலிருந்து 3 மீட்டர் மேற்புறமும், 3- மீட்டர் நிலத்துக்கு கீழ்புறம் உள்ளவாறு கட்டப்படவேண்டும். மேலும் சம்மந்தமான புகார்களை தெரிவிக்க மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் இயங்கக் கூடிய கட்டுபாட்டு அறை தொலைபேசி எண் 04343- 234444, வாட்ஸ் ஆப் எண் : 6369700230 என்ற எண்ணில் புகார் அளிக்கலாம் என ஆட்சியர் பிரபாகர் தெரிவித்தார்.

இதையும் படிங்க: குப்பையால் சூழப்பட்ட ஆழ்த்துளைக் கிணறு - மூடக் கோரிக்கை!

Intro:ஆழ்த்துளை கிணறுகள் குறித்த புகார்களை தெரிவிக்க மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 24- மணி நேரமும் இயங்க கூடிய கட்டுபாட்டு அறை தொலைபேசி எண் 04343- 234444, வாட்ஸ் ஆப் எண் : 6369700230 என்ற எண்ணில் புகார் அளிக்கலாம் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
Body:ஆழ்த்துளை கிணறுகள் குறித்த புகார்களை தெரிவிக்க மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 24- மணி நேரமும் இயங்க கூடிய கட்டுபாட்டு அறை தொலைபேசி எண் 04343- 234444, வாட்ஸ் ஆப் எண் : 6369700230 என்ற எண்ணில் புகார் அளிக்கலாம் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

ஆழ்த்துளை கிணறு அமைக்கும் விவசாயிகள் ரூ. 100 செலுத்தி படிவம் அ- வில் பூர்த்தி செய்து உள்ளாட்சி அமைப்புகளிடம் அளிக்க வேண்டும். அனுமதி பெற்ற பின்னரே ஆழ்த்துளை கிணறுகள் அமைக்க
வேண்டும். கைவிடப்பட்ட ஆழ்துளை கிணறுகளில் கேசிங் பைப்களை எக்காரணம் கொண்டும் ரிக் வாகன உரிமையாளர் அகற்ற கூடாது. மீறும் பட்சத்தில் வாகன உரிமையாளர்கள் மற்றும் நில உரிமையாளர் மீது குற்றவியியல் நடவடிக்கை எடுக்கப்படும்.
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், ரிக் வாகன உரிமையாளர்கள் மற்றும் ஆழ்த்துளை கிணறு அமைக்கும் நில உரிமையாளர்கள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து ஊரக வளர்ச்சித்துறை, வருவாய்த்துறை, அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் இன்று நடைபெற்றது.

பின்பு மாவட்ட ஆட்சியர் அவர்கள் பேசும் பொழுது:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஊரக பகுதிகள், நகராட்சி, மாநகராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளில் ரிக் வாகனம் மூலம் ஆழ்துழை கிணறுக்கள் அமைக்கும் போது கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் அரசானை எண் 26- நாள்: 18.2.2015 அன்றைய விதிமுறைகள் படி தமிழக அரசு
நடைமுறைப்படுத்த உத்தரவிட்டுள்ளது. அதனடிப்படையில் போர் வெல் வாகனம் உரிமையாளர்கள் அரசு வகுத்துள்ள விதிமுறைகளை 100- சதவிகிதம் கடைபிடிக்க வேண்டும். குறிப்பாக அனுமதி பெறுவதற்கான விண்ணப்ப படிவங்கள் அனைத்து படிவம் உ - இயில் கட்டணமாக ரூ. 15 ஆயிரம் வங்கி வரைவோலை செலுத்தி மாவட்ட ஆட்சித் தலைவரிடம் விண்ணப்பம் அளிக்க வேண்டும். விண்ணப்பம் பெறப்பட்ட 45- நாட்களுக்குள் விண்ணப்பித்தினை பரிசீலனை செய்து நிபந்தனைகளுடன் அனுமதி அளிக்கப்படும்.
மனுவை தள்ளுபடி செய்யும் முடிவை எடுக்கும் பட்சத்தில் எழுத்துப் பூர்வமாக தகவல் தெரிவிக்கப்படும்.

அனுமதி இன்றி போர்வெல் வாகனம் மூலம் ஆழ்துளை கிணறு அமைக்க கூடாது. போர்வெல் வாகனம் ஆழ்துழை கிணறு அமைத்து தண்ணீர் வராத நிலையில் கேசிங் பைப்களை கட்டாயம் அகற்ற கூடாது. அவ்வாறு அகற்றுவது தெரியவந்தால் போர்வெல் வாகன உரிமையாளர் மீது குற்றவியியல் நடவடிக்கை எடுக்கப்படும். கிணற்றின் உரிமையாளர் படிவம் ஆ. வில் குறிப்பிட்டபடி பணிகளை செய்ய அனுமதி பெற்றுள்ளாரா, என்பதை உறுதி படுத்திக்கொள்ள வேண்டும். கிணற்றின் வகை, ஆழம், பணி மேற்கொள்பவர், கிணற்றின் உரிமையாளர் பெயர் மற்றும் முகவரி, தொடர்பு விவரங்களை அறிவிப்பு பலகை மூலம் தெரிவிக்கப்பட வேண்டும்.

விவசாயிகள் கட்டாயம் கடைபிடிக்கப்பட வேண்டிய விதிமுறைகள். ஆழ்துளை கிணறு அமைக்கும் விவசாயிகள் ரூ. 100 செலுத்தி படிவம் அ- வில் பூர்த்தி செய்து
ஊராட்சி செயல் அலுவலரிடம் அளிக்க வேண்டும். விண்ணப்பம் பெறப்பட்ட 30- நாட்களுக்குள் செயல் அலுவலர் பரிசீலனை செய்து படிவம் அ- வில் குறிப்பிட்டுள்ள படி, நிபந்தனைகளுடன் அனுமதி அளிக்கப்படும்.

கிணறு தொடர்பான பணி மேற்கொள்ளும் போது கிணற்றை சுற்றிலும் முள்கம்பி வேலி அல்லது தகுதி தடுப்பு அமைக்கப்பட வேண்டும். போர்வெல்லை சுற்றி சிமெண்ட் காரையிலான தளம், நில மட்டத்திலிருந்து 3- மீட்டர் மேற்புறமும், 3- மீட்டர் நிலத்திற்கு கீழ் புறம் உள்ளவாறு, கட்டப்படவேண்டும். பணி இடைவேலையின் போது துளையிடப்பட்ட குழி அல்லது கிணறு சரியான முறையில் மூடப்பட்டு இருக்க வேண்டும். பணி முடிவுற்ற பின் கிணற்றை சுற்றி சகதி குழிகளையும், கால்வாய்களையும், மூடப்பட
வேண்டும். கிணற்றின் மேற்புறத்தை எக்கு தகடுகளாலும், சரியான மூடியை கொண்டு இருப்பு குழாயின் மேற்புறத்தை திருகு மறை மூடி கொண்டு மூடப்பட்டு இருக்க வேண்டும்.

பாதுகாப்பு முன்னேற்பாடுகளில்
ஏதேனும் குறைபாடுகள் இருந்தால் உரிய நடவடிக்கை எடுத்து அனுமதி ரத்து செய்யப்படும். மேலும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், வருவாய்த்துறை அலுவலர்கள், பேரூராட்சி செயல் அலுவலர்கள், நகராட்சி மற்றும் மாநகராட்சி துறை அலுவலர்கள் ஒவ்வொரு பகுதியிலும் உள்ள ஆழ்த்துளை
கிணறுகள் உள்ள விவரத்தினையும், அதில் எத்தனை ஆழ்துளை கிணறுகள் பயன்பாட்டில் உள்ளது, எத்தனை ஆழ்துளை கிணறுகள் பயன்பாடு இன்றி உள்ளது என்பதை கணக்கெடுக்க வேண்டும்.

பயன்பாடற்ற ஆழ்துளை கிணறுகளை மழை நீர் சேகரிப்பு கட்டமைப்பு ஏற்படுத்த வேண்டும். நீர் வரத்து
இல்லாத இடங்களில் உள்ள பயன்பாடற்ற போர்வெல்களை கழிமண், மணல், சிறுகற்கள் மற்றும் பொருட்களை கொண்டு தரை மட்ட அளவிற்கு நிரப்ப வேண்டும். அலுவலர்கள் போர்வெல் சம்பந்தமாக அனுமதி அளித்தல், நிராகரித்தல், குறித்து பதிவேடுகள் பராமரிக்க வேண்டும். அதில் எந்த கிராமத்தில் எத்தனை போர்வெல் உள்ளது எந்த சர்வே எண்ணில் போர்வெல் உள்ளது என்ற விவரங்கள் கட்டாயம் பதியப்பட்டிருக்க வேண்டும். உச்ச நீதிமன்றம் மற்றும் தமிழக அரசின் வழிகாட்டுதல் படி போல்வெல் உரிமையாளர்கள் மற்றும் ஆழ்துளை கிணறு அமைக்கும் நில உரிமையாளர்கள் உரிய விதிமுறைகளை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும்.

மேலும் இது சம்மந்தமான புகார்களை தெரிவிக்க மாவட்ட ஆட்சியர்
அலுவலகத்தில் 24- மணி நேரமும் இயங்க கூடிய கட்டுபாட்டு அறை தொலைபேசி எண் 04343- 234444, வாட்ஸ் ஆப் எண் : 6369700230 என்ற எண்ணில் புகார் அளிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் பேசினார்.
Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.