கெம்பெ கவுடா விஜயநகரப் பேரரசின் கீழ் ஆண்ட நிலக்கிழார் ஆவார். தற்போது கர்நாடக மாநிலத்தின் தலைநகராக விளங்கும் பெங்களூரு நகரத்தை நிறுவியவராகக் கூறப்படுகின்றது. கெம்பெ கவுடா, அவரது காலத்தில் வாழ்ந்த குறுநில மன்னர்களில் நன்கு படித்தவராகவும் திறன் மிக்கவராகவும் விளங்கினார். கெம்பெ நஞ்ச கவுடாவையடுத்து பதவியேற்ற கெம்பெ கவுடாவின் வாரிசுகள் யெலயங்கா பிரபுக்கள் என அழைக்கப்பட்டனர்.
யெலயங்காவில் ஆரம்பத்தில் வாழ்ந்து வந்த கெம்பே கவுடா, இடம்பெயர்ந்து தற்போதைய பெங்களூரை வடிவமைத்து அங்கு குடியேறினர். பெங்களூரைச் சுற்றிலும் கோயில்களையும், ஏரிகளையும் அமைத்ததாக அறியப்படுகிறார். பெரும் சமூக சீர்திருத்தவாதியாகவும் விளங்கியவராக வரலாறுகள் கூறுகின்றன. கெம்பே கவுடாவின் 510ஆவது பிறந்தநாள் நேற்று, ஓசூரில் பிரமாண்டமான முறையில் கொண்டாடப்பட்டது.
கர்நாடக மாநிலத்திலிருந்தும், தமிழ்நாட்டைச் சேர்ந்த ஏராளமானோரும் இந்த பிறந்தநாள் விழாவில் பங்கேற்றனர்.