ETV Bharat / state

கிருஷ்ணகிரியில் வெறி நாய் கடித்து குழந்தைகள் உள்பட 80 பேர் காயம்!

கிருஷ்ணகிரி: போச்சம்பள்ளி அருகே வெறி நாய் கடித்ததில் குழந்தைகள் உள்பட 80 பேர் படுகாயம் அடைந்தனர்.

வெறி நாய் கடித்து குழந்தைகள் உட்பட 80 பேர் காயம்

author img

By

Published : Oct 21, 2020, 7:44 PM IST

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே சந்தூர் கிராமத்தில் இன்று (அக.21) வெறிநாய் ஒன்று புகுந்தது. பின்னர் அந்த நாய் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரட்டி விரட்டி கடித்தது.

சிறிது நேரத்தில் அங்கிருந்து எங்கோ ஓடி ஒளிந்து மாயமாகிவிட்டது. இந்நிலையில், அந்த நாயை பிடிக்க கிராம மக்கள் அனைத்து இடங்களிலும் தேடினர். இருப்பினும் எங்கும் கிடைக்கவில்லை.

வெறி நாய் கடித்து குழந்தைகள் உள்பட 80 பேர் காயம்

இதையடுத்து வெறிநாய் கடித்த குழந்தைகள் உள்பட 80 பேர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சென்றனர்.

போச்சம்பள்ளி பகுதிகளில் ஏற்கனவே நாய் தொல்லை இருப்பதாக பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்திடம் புகார் தெரிவித்துள்ளனர்.

தற்போது வெறிநாய் கடித்து பலர் காயமடைந்ததால் உடனடியாக தங்கள் பகுதிகளில் உள்ள நாயை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகத்திற்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: பிரியாணியில் விஷம் கலந்துகொடுத்து நாய் கொலை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.