ETV Bharat / state

மழையில் நனைந்து நாசமான 4 ஆயிரம் புத்தகங்கள் - வியாபாரி வேதனை

மதுரை: இரண்டு நாட்களுக்கு முன்பாக பெய்த கடும் மழையில் பழைய புத்தகக் கடையில் இருந்த நான்காயிரத்திற்கும் மேற்பட்ட புத்தகங்கள் அனைத்தும் நாசமாயின.

மழையில் நனைந்து நாசமான 4 ஆயிரம் புத்தகங்கள் - வியாபாரி வேதனை
மழையில் நனைந்து நாசமான 4 ஆயிரம் புத்தகங்கள் - வியாபாரி வேதனை
author img

By

Published : May 31, 2020, 10:26 AM IST

மதுரை ரயில் நிலைய சந்திப்பின் முன்பாக பழைய புத்தகங்களைக் கொண்டு கடை நடத்திவருபவர் செந்தில்குமார். இவரது கடையில் பல்வேறு அரிய பழைய புத்தகங்கள் வாங்குவதற்கென்று பெரும் வாசகர் கூட்டம் உண்டு.

இந்நிலையில், கடந்த வியாழன் அன்று மாலை ஐந்து மணி நேரத்திற்கும் மேலாக கொட்டி தீர்த்த கன மழையில் செந்தில்குமார் கடையில் இருந்த நான்காயிரத்திற்கும் மேற்பட்ட புத்தகங்கள் அனைத்தும் நனைந்து நாசமாயின.

மழையில் நனைந்து நாசமான புத்தகங்களை மீண்டும் காய வைத்து விற்பனைகக்காக வைத்துள்ள செந்தில்குமார்

ஏற்கனவே நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் தன் சாலையோர கடையை திறக்காமல், வியாபாரம் ஏதுமின்றி கையிருப்பு பணத்தை வைத்து வாழ்க்கையை ஓட்டிய இவர், கடந்த சில தினங்களுக்கு முன்பு அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு தளர்வுகளுக்கு பின்புதான் கடையைத் திறந்தார்.

இந்த நேரத்தில் மழையால் ஏற்பட்ட இந்த இழப்பு செந்தில்குமாருக்கு பெருத்த அடியாக மாறிவிட்டது. தப்பிப் பிழைத்த புத்தகங்களை நடைபாதையில் காய வைத்து மீண்டும் விற்பனை செய்து தன் வாழ்வாதாரத்தை தக்க வைக்க முயற்சித்து வருகிறார் செந்தில்.

இதையும் படிங்க; அரசின் மூன்று வேளாண் சீர்திருத்தங்களை விட நிலச் சீர்திருத்தம் முக்கியம் - வேளாண் பொருளாதார நிபுணர் வெங்கடேஷ் ஆத்ரேயா

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.