ETV Bharat / state

ஓசூர் அருகே வீட்டில் பாலியல் தொழிலில் ஈடுபட்ட 3 பேர் கைது! - Krishnagiri news

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே வீட்டில் பாலியல் தொழிலில் ஈடுபட்ட 3 பேரை கைது செய்த காவல் துறையினர், மீட்கப்பட்ட 2 பெண்களை காப்பகத்தில் சேர்த்துள்ளனர்.

ஓசூர் அருகே வீட்டில் பாலியல் தொழிலில் ஈடுபட்ட 3 பேர் கைது

author img

By

Published : Jun 9, 2023, 9:36 AM IST

கிருஷ்ணகிரி: ஓசூர் அடுத்த பாகலூர் சாலையில் என்ஜிஜிஓஎஸ் காலனி உள்ளது. இந்த நிலையில், இந்த காலனியில் உள்ள ஒரு வீட்டில் பாலியல் தொழில் செய்து வருவதாக டிஎஸ்பிக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து, டிஎஸ்பியின் உத்தரவின் பேரில் அட்கோ காவல் துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று சோதனை மேற்கொண்டுள்ளனர்.

இந்த சோதனையின்போது, சம்பந்தபட்ட வீட்டினுள் 2 பெண்கள் மற்றும் 3 ஆண்கள் இருந்துள்ளனர். இதனையடுத்து, அங்கு இருந்த அவர்களிடம் காவல் துறையினர் விசாரணை நடத்தி உள்ளனர். இந்த விசாரணையில், அவர்கள் பாலியல் தொழிலில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து, பாலியல் தொழிலில் ஈடுபட்ட சூளகிரியைச் சேர்ந்த திருப்பதி (32), தேன்கனிக்கோட்டையைச் சேர்ந்த சீனிவாசன் (26) மற்றும் ஆனேக்கல்லைச் சேர்ந்த முனி (45) ஆகிய 3 பேரையும் காவல் துறையினர் கைது செய்தனர். அதேநேரம், அங்கு பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டு இருந்த 2 பெண்களிடமும் காவல் துறையினர் விசாரணை நடத்தினர்.

தொடர்ந்து, விசாரணைக்குப் பின்னர் 2 பெண்களும் காப்பகத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர். மேலும், இது குறித்து வீட்டின் உரிமையாளர் பிரகாஷ் என்பவரிடமும் அட்கோ காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அது மட்டுமல்லாமல், இந்த விவகாரத்தில் பிடிபட்ட 3 பேரையும் கைது செய்த காவல் துறையினர், அவர்களை நீதிபதி முன் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

முன்னதாக, சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள சிவி ராமன் சாலையில் இயங்கி வரும் ராஜ் இன் என்ற விடுதியில் பாலியல் தொழில் நடைபெற்று வருவதாக தகவல்கள் வந்துள்ளது. அதேநேரம், சில நாட்களாக இந்த விடுதியில் கென்ய நாட்டுப் பெண்களின் நடமாட்டம் அதிகமாக இருந்துள்ளது.

இதனிடையே, கென்ய நாட்டைச் சேர்ந்த ஒரு பெண், தன் உடன் அறையில் தங்கி இருக்கும் மற்ற பெண்கள், தன்னை அடித்துத் துன்புறுத்துவதாக மயிலாப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்தப் புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட காவல் துறையினர், சம்பந்தப்பட்ட விடுதியில் கென்ய பெண்களை வைத்து பாலியல் தொழில் செய்து வந்ததை உறுதி செய்துள்ளனர்.

மேலும், இதில் வரும் வருமானத்தில் பங்கு பிரித்துக் கொள்வதில் ஏற்பட்ட தகராறில், மற்ற பெண்கள் புகார் அளித்த பெண்ணை துரத்தி அடித்துள்ளதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதனையடுத்து, விடுதி உரிமையாளர் சரவணராஜ், சேலத்தைச் சேர்ந்த பராமரிப்பாளர் கண்ணன் ஆகிய இருவரையும் காவல் துறையினர் கைது செய்தனர்.

அதேபோல், அங்கு இருந்த 4 கென்ய நாட்டைச் சேர்ந்த பெண்களை மீட்ட காவல் துறையினர், அவர்களை காப்பகத்தில் சேர்த்தனர். இந்த சம்பவத்தின்போது, விடுதியில் இருந்த ஆபாச பொம்மைகளையும் காவல் துறையினர் பறிமுதல் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: மாணவிகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய காதல் ஜோடி - விசாரணையில் தெரியவந்த திடுக்கிடும் தகவல்கள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.