பெங்களூருவிலிருந்து விழுப்புரம் நோக்கி சென்ற லாரியில் சட்டவிரோதமாக குட்கா பொருட்கள் கடத்தப்படுவதாக கிருஷ்ணகிரி நகர காவல் துறைக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அப்பகுதியில் சோதனை செய்த காவல் துறையினர், கிருஷ்ணகிரி வழியாக கடத்தி செல்லப்பட்ட 23 லட்சத்து 67ஆயிரம் மதிப்பிலான குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர்.
இந்நிலையில் குட்காவைக் கடத்தி சென்ற விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் பகுதியைச் சேர்ந்த சுந்தரமூர்த்தி என்பவரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.
மேலும் அவரிடம் நடத்திய விசாரணையில், ஒரு லட்சத்து ஐம்தாயிரம் ரூபாய் லஞ்சம் பெற்றுக்கொண்டு குட்கா லாரியை குருபரப்பள்ளி காவல் நிலைய எல்லையை கடந்து செல்ல அனுமதித்த சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் சிவகுமார் மற்றும் தலைமை காவலர்கள் சரவணன், முருகன் ஆகிய மூவரை பணி நீக்கம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பண்டி கங்காதர் உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: மாசடைந்து நுரை தள்ளிய பட்டினம்பாக்கம் கடற்கரை! பெருநிறுவன கழிவுகளால் மாசுபாடா?