ETV Bharat / state

கர்நாடகாவிற்கு லாரியில் கடத்தப்பட்ட 17 டன் ரேஷன் அரிசி பறிமுதல்!

கிருஷ்ணகிரி: கர்நாடக மாநிலம் பங்காருபேட்டைக்கு லாரியில் கடத்தி வரப்பட்ட 17 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டு, ஒருவரை உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு அலுவலர்கள் கைது செய்துள்ளனர்.

ration rice
author img

By

Published : Nov 22, 2019, 9:03 PM IST

கிருஷ்ணகிரியில் உள்ள பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை சுங்கச்சாவடி அருகே உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு டிஎஸ்பி ரவிக்குமார், ஆய்வாளர் கோபி, உதவி ஆய்வாளர்கள் சிவசாமி, ரகுநாத், மாதேஸ்வரன், திருநாவுக்கரசு, உள்ளிட்ட காவலர்கள் வாகன தணிக்கை மேற்கொண்டனர். அப்போது ஈரோட்டிலிருந்து பெங்களூரு நோக்கிச் சென்று கொண்டிருந்த கர்நாடக பதிவு எண் கொண்ட லாரியை சந்தேகத்தின் பேரில் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.

அதில் தமிழ்நாடு அரசன் விலையில்லாத 17 டன் ரேஷன் அரிசி கடத்தப்பட்டு, அவை பெங்களூருக்கு கொண்டு செல்லப்பட இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து லாரியை ஓட்டி வந்தவர், ஈரோடு பகுதியைச் சேர்ந்த அஜித். அவரை கைது செய்த தடுப்பு பிரிவு காவல் துறையினர் கடத்தி வரப்பட்ட 5 லட்சம் மதிப்பிலான 17 டன் அரிசியும், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட லாரியையும் பறிமுதல் செய்தனர்.

கடத்தப்பட்ட 17 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

தொடர்ந்து இந்த கடத்தல் தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், இதில் சம்பந்தப்பட்ட மேலும் சிலரைத் தேடி வருவதாகவும் உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

தமிழ்நாட்டில் இலவசமாக விற்கப்படும் பொதுவிநியோகத் திட்ட இந்த அரிசியானது கர்நாடக மாநிலம் பங்காருபேட்டை என்னும் இடத்தில் பல்வேறு வகையான புதுப்பொலிவூட்டும் அரிசி ஆலைகளில் பாலிஷ் செய்து விற்கப்படுகிறது. அங்குள்ள சந்தைகளில் ரூபாய் ஐம்பதுக்கும், மேற்பட்ட விலையில் வெளிச் சந்தைகளிலும் விற்கப்படுகிறது என்று பெயர் வெளியிட விரும்பாத ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: விசாகப்பட்டினம் - சென்னை ரயில், 14 கிலோ கஞ்சா - 20 வயது கடத்தல்காரனைப் பிடித்த காவல்துறை!

Intro:கிருஷ்ணகிரி வழியாக கர்நாடக மாநிலத்தின் பங்காருபேட்டை க்கு லாரியில் கடத்தி வரப்பட்ட 5 லட்சம் மதிப்பிலான 17 டன் ரேஷன் அரிசி பறிமுதல் - ஒருவர் கைது  - உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் நடவடிக்கை.Body:கிருஷ்ணகிரி வழியாக கர்நாடக மாநிலத்தின் பங்காருபேட்டை க்கு லாரியில் கடத்தி வரப்பட்ட 5 லட்சம் மதிப்பிலான 17 டன் ரேஷன் அரிசி பறிமுதல் - ஒருவர் கைது  - உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் நடவடிக்கை.

கிருஷ்ணகிரியில் உள்ள பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை சுங்கச்சாவடி அருகே உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு டிஎஸ்பி ரவிக்குமார் ஆய்வாளர் கோபி (பொறுப்பு) மற்றும் உதவி ஆய்வாளர்கள் சிவசாமி, ரகுநாத், மாதேஸ்வரன், திருநாவுக்கரசு, உள்ளிட்ட காவலர்கள் இன்று வாகனத் தணிக்கை மேற்கொண்டிருந்த போது ஈரோடிலிருந்து பெங்களூர் நோக்கி சென்று கொண்டிருந்த கர்நாடக பதிவு எண் கொண்ட லாரியை சந்தேகத்தின் பேரில் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர் அப்போது அதில் தமிழக அரசன் விலையில்லாத 17 டன் ரேஷன் அரிசி கடத்தப்பட்டு அவை பெங்களூருக்கு கொண்டு செல்லப்பட இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது  இதனை தொடர்ந்து லாரியை ஓட்டி வந்தார் ஈரோடு பகுதியை சேர்ந்த அஜித் என்பவரை கைது செய்த தடுப்பு பிரிவு காவல்துறையினர் கடத்தி வரப்பட்ட 5 லட்சம் மதிப்பிலான 17 டன் அரிசியும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 10 லட்சம் மதிப்பிலான லாரியை பறிமுதல் செய்தனர்.

தொடர்ந்து இந்த கடத்தல் தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் இதில் சம்பந்தப்பட்ட மேலும் சிலரை தேடி வருவதாகவும் உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

தமிழ்நாட்டில் இலவசமாக விற்கப்படும் பொதுவிநியோகத் திட்ட இந்த அரிசியானது கர்நாடக மாநிலத்தில் பங்காருபேட்டை என்னும் இடத்தில் பல்வேறு வகையான புதுப்பொலிவூட்டும் அரிசி ஆலைகளில் பாலிஷ் செய்து சந்தைகளில் ரூபாய் ஐம்பதுக்கும் மேற்பட்ட விலையில் வெளிச் சந்தைகளில் விற்கப்படுகிறது என்று பெயர் வெளியிட விரும்பாத ஒருவர் தெரிவித்தார்.Conclusion:

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.