கிருஷ்ணகிரி அருகே வெப்பாலம்பட்டி அடுத்த அகரம் காட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் பரமசிவன். விவசாயியான இவர், 16 ஆடுகள் வளர்த்து வந்துள்ளார். தினமும் அருகிலுள்ள வனப்பகுதியில் ஆடுகளை மேய்ச்சலுக்காக அழைத்து செல்வது வழக்கம்.
இந்நிலையில் வழக்கம் போல் இன்றும் ஆடுகளை வனப்பகுதியில் மேய்ச்சலுக்கு அழைத்து சென்றுவிட்டு மாலை வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, பாறை அருகில் இருந்த மழை நீரை ஆடுகள் குடித்தன.
தண்ணீரை பருகிய சிறிது நேரத்தில் வாய், மூக்கில் இருந்து ரத்தம் வடிந்து ஒவ்வொன்றாக மயங்கி விழத்தொடங்கின. இதுகுறித்து தகவல் அறிந்த கால்நடை மருத்துவர்கள் சம்பவம் இடத்திற்கு வந்து ஆடுகளை பரிசோதித்ததில் ஆடுகள் அனைத்தும் இறந்துவிட்டதாக உறுதிப்படுத்தினார்கள்.
இது தொடர்பாக பாதிக்கப்பட்ட விவசாயி தெரிவிக்கையில், "ஆடுகள் அனைத்தும் இந்த இடத்தில் தான் தினமும் தண்ணீர் குடித்து வந்தன. மர்ம நபர்கள் யாரேனும் தண்ணீரில் விஷம் கலந்து ஆடுகளை கொலை செய்ததாக சந்தேக்கிறேன். மேலும், இது போன்ற சம்பவம் இனிமேல் நடக்காமல் இருக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.