ETV Bharat / state

குடும்பத் தொல்லைகளிலிருந்து விடுபட குடிமகனின் விபரீத முடிவு! - கரூர்

கரூர்: குடிப்பழக்கத்துக்கு ஆளானதால் விரக்தியில் குடும்பத் தொல்லைகளிலிருந்து விடுபட இளைஞர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இளைஞர்
author img

By

Published : Jun 19, 2019, 9:13 AM IST

கரூர் மாவட்டம் தாந்தோணி காவல் எல்லைக்கு உட்பட்ட பாரதிதாசன் நகரைச் சேர்ந்தவர் ரவிக்குமார் மகன் வடிவேல் (23). இவர் இப்பகுதியில் உள்ள பேருந்துகள் கட்டமைக்கும் நிறுவனத்தில் மேற்பார்வையாளராக பணியாற்றிவருகிறார். குடிப்பழக்கத்திற்கு அடிமையான வடிவேல் திருமணத்திற்கு பின்பும் குடிப்பழக்கத்தை தொடர்ந்துள்ளார். இதனால், வடிவேலுக்கும் அவரது மனைவிக்குமிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இரு தினங்களுக்கு முன்பு வேலை முடிந்து வீட்டிற்கு திரும்பிய வடிவேல் வழக்கம்போல் குடிபோதையில் வந்துள்ளார். இதனால், கோபமடைந்த அவரது மனைவி கோபித்துக்கொண்டு திருப்பூரில் உள்ள அவரது தாயார் வீட்டிற்குச் சென்றுவிட்டார். இதனிடையே தாய் வீட்டிற்குச் சென்ற மனைவி திரும்ப வராததால் விரக்தியடைந்த வடிவேல் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்நிலையில், தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தாந்தோணிமலை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

தற்கொலை செய்துகொண்ட இளைஞர்

குடிப்பழக்கத்திற்கு ஆளாகி மன விரக்தியில் வடிவேல் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Intro:குடிப்பழக்கத்தால் விரக்தியில் தூக்கிட்டு தற்கொலைBody:கரூர் 19-06-2019

குடிப்பழக்கத்துக்கு ஆளானதால் விரக்தியில் குடும்ப தொல்லைகளிலிருந்து விடுபட தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட இளைஞர்.

தாந்தோணி காவல் எல்லைக்கு உட்பட்ட பாரதிதாசன் நகரை சேர்ந்தவர் ரவிக்குமார் மகன் வடிவேல் வயது 23.

இவர் இப்பகுதியில் உள்ள பஸ் பாடி நிறுவனத்தில் மேற்பார்வையாளராக பணியாற்றி வருகிறார்.

இவர் கடந்த சில வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்துள்ளார்.

வடிவேல் மதுப்பழக்கத்திற்கு அடிமையாகி கடந்த சில காலமாக இருந்துள்ளார்.

இதனால் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு என்பது இயல்பானதாக இருந்துள்ளது.

வழக்கம்போல் குடிபோதையில் வந்த இவருக்கும் இவரது மனைவிக்கும் ஏற்பட்ட வாய் தகராறில் கோபித்து சென்ற மனைவி திருப்பூருக்கு சென்று விட்டார்.

இதனால் ஏற்பட்ட மன விரக்தியில் வடிவேல் இன்று இரவு தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சம்பவம் குறித்து தாந்தோணிமலை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனால் இப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.