கரூர் அருகே மூக்கணாங்குறிச்சி பெரியார் நகரில் வசிக்கும் சென்ட்ரிங் தொழிலாளி நாகராஜன். இவர் தனது மனைவி, இரண்டு குழந்தைகளுடன் வாடகை வீட்டில் வசித்துவருகிறார்.
கடந்த 40 நாள்களாக தொடர்ந்துவரும் ஊரடங்கு உத்தரவு காரணமாக இவர் வேலைக்குச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் வருமானம் ஏதுமின்றி வாழ்வாதாரமே கேள்விக்குறியாகி சிரமப்பட்டுவந்தார்.
இவரால் வீட்டு வாடகை கொடுக்க முடியவில்லை. இதைத்தொடர்ந்து வீட்டின் உரிமையாளர் வீட்டைக் காலி செய்யுமாறு நாகராஜனை கடந்த 10 நாள்களாகக் கட்டாயப்படுத்திவந்துள்ளார்.
தன்னால் வாடகை கொடுக்க முடியாத நிலையில், வேறு வழியின்றி தனது மனைவி, இரண்டு குழந்தைகளுடன் வீட்டைக் காலி செய்துவிட்டு இவர் சாலையோரத்தில் இன்று குடியேறினார்.
இது பற்றி தகவல் அறிந்த வெள்ளியணை காவல் துறையினர், நாகராஜன் தங்கியிருந்த வீட்டின் உரிமையாளருடன் பேசி, வாடகை கொடுக்க அவகாசம் பெற்றுக் கொடுத்தனர். பின்னர் அவரை மீண்டும் அதே வீட்டில் குடியேற வைத்தனர்.
இதையும் படிங்க: கரூரில் கரோனாவிலிருந்து மீண்ட 95 வயது மூதாட்டி உள்பட ஐவர் வீடு திரும்பினர்