ETV Bharat / state

தீபாவளிக்கு தயாராகும் ஆவின் பலகாரங்கள்... அமைச்சர் தந்த தகவல்.. - கரூர்

தீபாவளிக்கு தரமான ஆவின் பலகாரங்கள் தயாரிக்கும் பணி தொடக்கபட்டுள்ளதாக பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தகவல் தெரிவித்துள்ளார் .

work-of-preparing-aavin-balakaras-for-diwali-has-started-minister-mano-thangaraj
தீபாவளிக்கு தயாராகும் ஆவின் பலகாரங்கள்
author img

By

Published : Jul 29, 2023, 7:37 PM IST

ஆவின் பலகாரங்கள் தயாரிக்கும் பணி தொடக்கம் - அமைச்சர் மனோ தங்கராஜ் தகவல்

கரூர்: தமிழகத்தில் கடந்த இரண்டு மாதங்களில் 3.5 லட்சம் லிட்டர் பால் ஆவின் கொள்முதல் அதிகரித்துள்ளது, கலப்படமற்ற பால் விற்பனையால் ஆவின் நிறுவனத்தை ,நவீனப்படுத்தும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக தமிழக பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உள்ள வல்லக்குளம் திருமலைநாதன்பட்டி, கிருஷ்ணராயபுரம் அருகே உள்ள வரவனை மஞ்சநாயக்கன்பட்டி ஆகிய பகுதிகளில் ஆவின் பால் குளிர்விப்பு நிலையங்களை தமிழக பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் இன்று துவக்கி வைத்தார்.இதனைத் தொடர்ந்து கரூர் திருச்சி நெடுஞ்சாலையில் அமைந்துள்ள தோரணக்கல்பட்டியில் ரூபாய் ஒரு கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் ஆவின் குளிரூட்டு மையத்தினை அமைச்சர் நேரில் ஆய்வு செய்தார்.

இதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மனோ தங்கராஜ் பேசுகையில், ஆவின் பால் நிறுவனத்தில் பல்வேறு முன்னெடுப்புகள் தமிழக அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழக முதல்வரின் வழிகாட்டுதலின்படி, விவசாயிகளின் கால்நடை எண்ணிக்கையை பெருக்கி சீரான வருவாய் வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கரூர் மாவட்டத்தில் மாடுகள் வளர்ப்பதற்கு நல்ல வாய்ப்புகள் சூழல்கள் இருப்பதால் ஒரு கோடியே 6 லட்சம் மதிப்பீட்டில் இன்று நான்கு குளிரூட்டப்பட்ட பால் நிலையங்களை ஆவின் சார்பில் இன்று துவக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள பால் உற்பத்தியாளர்களுக்கு தினசரி வழங்கும் பாலின் தரத்தை நிர்ணயம் செய்து அதற்கான விலையை வழங்கி வருவது நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. மேலும் கூட்டுறவு சங்கங்களின் கீழ் செயல்படும் பால் கொள்முதல் செய்யப்படும் நிலையங்களுக்கு போதிய இயந்திரங்கள் இதற்காக வழங்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் பால் தேவையை பூர்த்தி செய்யும் வழியில் சென்னையில் மட்டும் நடப்பு மாதத்தில் 50,000 லிட்டர் கூடுதல் பால் கொள்முதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இன்னும் தமிழகத்தின் பால் தேவை அதிகமாக இருப்பதால் உற்பத்தியை பெருக்க வேண்டிய சூழல் உள்ளது.

கடந்த இரண்டு மாத கால தொடர் நடவடிக்கையால் 3.5 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் அதிகரித்துள்ளது. பால் உற்பத்தியை பெருக்குவதற்கு கடனாக வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள பட்டு வருகிறது. ஆவின் நிறுவனம் வழங்கும் பாலில் கலப்படமில்லாத 100 சதவீத சுத்தமான பால் வழங்கப்பட்டு வருகிறது ரசாயன கலப்புக்கு ஆவின் நிறுவனத்தில் வாய்ப்பில்லை. எனவே விற்பனை சந்தையில் ஆவின் பால் தரத்திலும் விலையிலும் தனியார் பால் நிறுவனங்களுக்கு போட்டியாக உள்ளது.

தீபாவளி பலகாரங்கள் விற்பனை செய்வதற்கு ஆவின் நிறுவனம் தயாராகி வருகிறது தரமான பலகார வகைகள் சுத்தமான நெய்யில் வழங்குவதற்கு ஆவின் நிறுவனத்தில் எந்த தவறுகளும் குறைபாடுகளும் ஏற்படாத வகையில் தயாரிக்கப்பட்டு வருகிறது அதற்கு கடந்த காலத்தை போல் இல்லாமல் இம்முறை தீவிர கண்காணிப்பில் உற்பத்தி செய்வதற்கு அரசு உத்தரவாதம் அளிக்கிறது என்றார்.

இதையும் படிங்க : "பாத யாத்திரை அல்ல;பாவ யாத்திரை" - அமித்ஷா, அண்ணாமலையை விமர்சித்த முதல்வர் மு.க.ஸ்டாலின்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.