கரூர்: கரூர் மாவட்டம் தென்னிலையைச் சேர்ந்தவர் கண்ணன் மனைவி பிருந்தா (29). இவர் வாரந்தோறும் சாய்பாபா கோயிலுக்குச் செல்வது வழக்கம். இந்நிலையில், சாய்பாபா கோயிலுக்கு பிருந்தாவும், அவரது உறவினர் பெண்ணான சங்கீதாவும் இருசக்கர வாகனத்தில் தென்னிலையிலிருந்து கரூர் நோக்கிச் சென்றுகொண்டிருந்தனர்.
கரூர்-கோவை சாலையில் கொங்கு மெஸ் அருகில் வந்துகொண்டிருந்தனர். அப்போது, பின்புறமாக வந்த லாரி ஒன்று அவர்கள் மீது மோதியது.
இந்த விபத்தில், இருசக்கர வாகனத்தில் பின்புறமாக அமர்ந்திருந்த பிருந்தா, சம்பவ இடத்திலேயே தலையில் அடிபட்டு உயிரிழந்தார்.
ஓட்டுநர் தலைமறைவு
விபத்து ஏற்படுத்திய லாரி ஓட்டுநர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். இது குறித்து சம்பவ இடத்துக்கு விரைந்துவந்த கரூர் நகர காவல் ஆய்வாளர் செந்தூர்பாண்டியன், உடலைக் கைப்பற்றி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூராய்வு மேற்கொள்ள அனுப்பிவைத்தார்.
மேலும், விபத்து நடந்த இடத்தில் லாரியை விட்டுவிட்டு, லாரி ஓட்டுநர் தலைமறைவானதால், அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இச்சம்பவம் பிருந்தா உறவினர்கள், அப்பகுதியினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: 'தொடர் வழிப்பறி - சிசிடிவி மூலம் சிக்கிய இளைஞர்'