ETV Bharat / state

100 நாள் வேலை திட்டத்தால் பாதிக்கப்படும் விவசாயிகள்! - சம்பா சாகுபடியில் மேற்குவங்க தொழிலாளர்கள்

கரூர் : நூறு நாள் வேலை திட்டத்தால் விவசாயத்திற்கு வேலைக்கு ஆட்கள் கிடைக்காமல் , சம்பா சாகுபடியில் மேற்கு வங்க தொழிலாளர்கள் மும்பரமாக பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

http://10.10.50.85:6060//finalout4/tamil-nadu-nle/thumbnail/01-October-2019/4618847_120_4618847_1569948925516.png
author img

By

Published : Oct 1, 2019, 11:01 PM IST

100 நாள் வேலை உறுதி திட்டத்தால், விவசாயத்திற்கு வேலை ஆட்கள் கிடைப்பதில்லை. இதனால், மேற்கு வங்க பணியாளர்களை விவசாய பணியில் ஈடுபடுத்தும் நிலைக்கு கரூர் மாவட்ட விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர். நடப்பு ஆண்டில் தண்ணீர் திறக்கப்பட்டதால் கிருஷ்ணராயபுரம், குளித்தலை, கரூர் ஆகிய வட்டாரங்களில் சம்பா நெல் சாகுபடி பரவலாக நடைபெற்று வருகிறது. இங்கு, நடவு முறையில் பயிர் சாகுபடி நடப்பதால் அதிகளவில் வேலைக்கு ஆட்கள் தேவைப்படுகின்றனர்.

மேலும், நாற்றங்கால் பறிப்பு, கட்டுதால், நடவு ஆகிய பணிகளுக்கு உள்ளூர் பணியாளர்களை ஈடுபடுத்தினால், ஒரு ஏக்கருக்கு 4,500 ரூபாய் வரை செலவு ஆகும். இதுபோன்ற விவசாய பணிகளில் உள்ளுர் பெண்கள் மட்டுமே ஈடுபடுகின்றனர். அவர்கள், காலை, 6.00 முதல் பகல், 12.00 வரை வேலை செய்கின்றனர். இதனால் செலவு, காலம் விரையம் ஏற்படுகிறது.

சம்பா சாகுபடியில் மேற்குவங்க தொழிலாளர்கள்

மேலும், நூறு நாள் திட்டத்தில் கூலி கூடுதலாக கிடைப்பதால் ஆட்கள் கிடைப்பது சிரமமாக உள்ளது. இந்நிலையில், மேற்கு வங்காளத்தில் இருந்து தொழிலாளர்களை வரவழைத்து சாகுபடி பணியில் ஈடுபடுத்தி வருகின்றனர். இவர்கள் அனைத்து பணிக்கும் ஏக்கருக்கு, 4,000 ரூபாயே பெற்றுக் கொள்கின்றனர். எத்தனை ஏக்கராக இருந்தாலும், ஒரு நாளைக்குள் முடித்து விடுகின்றனர். வரிசை முறை என்ற தொழில் நுட்பத்தில் நடவு பணியை செய்வதால், எலி தாக்குதல் குறைவதோடு மகசூல் அதிகரிக்கிறது. எனவே, வட மாநிலத்தவர்கள் விவசாய பணி செய்யும் நிலை உருவாகியுள்ளது.

இதையும் படிங்க:

சிலம்பத்தில் உலக சாதனை செய்த கரூர் இளைஞர்

Intro:நூறு நாள் வேலை திட்டத்தால் விவசாயத்திற்கு வேலைக்கு ஆட்கள் கிடைக்காமல் சம்பா சாகுபடியில் மே.வங்க தொழிலாளர்கள் மும்பரமாக பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.Body:கரூர் மாவட்டத்தில் நூறு நாள் வேலை திட்டத்தால் விவசாயத்திற்கு வேலைக்கு ஆட்கள் கிடைக்காமல் சம்பா சாகுபடியில் மே.வங்க தொழிலாளர்கள் மும்பரமாக பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இருப்பினும், நூறு நாள் வேலைத்திட்டத்தில் உள்ள பணியாட்களை சாகுபடி பணிக்கு ஈடுபடுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
கரூர் மாவட்டத்தில், ஆண்டுதோறும், 12 ஆயிரத்து, 852 ஹெக்டேர் நெல் சாகுபடி நடைபெறும். அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்தாலும், இங்கு பாசனத்திற்கு தண்ணீர் வரத்து மிகவும் குறைவு என்பதால், பெரும் பாலும் காவிரி ஆற்றுப் பாசன பகுதிகளில் சம்பா சாகுபடி நடக்கிறது.
கடந்த ஆண்டு போதிய மழை இல்லாததால், 4,000ஹெக்டேர் மட்டுமே சம்பா சாகுபடி நடந்தது. நடப்பு ஆண்டில் 63 நாட்கள் காலதாமதமாக ஆகஸ்ட் 13ல் மேட்டூர் அணையில் இருந்து நீர் திறக்கப்பட்டதால் சம்பா சாகுபடி விறு, விறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில், 12000 ஹெக்டேர் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்ட நிலையில், 2800 ஹெக்டேர் பரப்பில் சம்பா சாகுபடி நடந்துள்ளது. அடுத்த வாரத்திற்குள் சாகுபடி பரப்பு இலக்கை அதிகரிக்கும் என வேளாண் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில், 100 நாள் வேலை உறுதி திட்டத்தால், விவசாயத்திற்கு வேலை ஆட்கள் கிடைப்பதில்லை. இதனால், மே.வங்க பணியாளர்கள் விவசாய பணியில் ஈடுபடுத்தும் நிலைக்கு கரூர் மாவட்ட விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர்.
நடப்பு ஆண்டில் தண்ணீர் திறக்கப்பட்டதால் கிருஷ்ணராயபுரம், குளித்தலை, கரூர் ஆகிய வட்டாரங்களில் சம்பா நெல் சாகுபடி பரவலாக நடைபெற்று வருகிறது. இங்கு, நடவு முறையில் பயிர் சாகுபடி நடப்பதால் அதிகளவில் வேலைக்கு ஆட்கள் தேவைப்படுகின்றனர். மேலும், நாற்றங்கால் பறிப்பு, கட்டுதால், நடவு ஆகிய பணிக்கு உள்ளுர் பணியாளர்களை ஈடுபடுத்தினால், ஒரு ஏக்கருக்கு, 4,500 ரூபாய் வரை செலவு ஆகும். இதுபோன்ற விவசாய பணிகளை உள்ளுர் பெண்கள் மட்டுமே ஈடுபடுகின்றனர். அவர்கள், காலை, 6.00 முதல் பகல், 12.00 வரை வேலை செய்கின்றனர். இதனால், செலவு மற்றும் காலம் விரையம் ஏற்படுகிறது. மேலும், நூறு நாள் திட்டத்தில் கூலி கூடுதலாக கிடைப்பதால் ஆட்கள் கிடைப்பது சிரமமாக உள்ளது.
இந்நிலையில், மே.வங்காளத்தில் இருந்து தொழிலாளர்களை வரவழைத்து சாகுபடி பணியில் ஈடுபடுத்தி வருகின்றனர். இவர்கள் அனைத்து பணிக்கும் ஏக்கருக்கு, 4000 ரூபாயே பெற்றுக் கொள்கின்றனர். எத்தனை ஏக்கராக இருந்தாலும், ஒரு நாளைக்குள் முடித்து விடுகின்றனர். வரிசை முறை என்ற தொழில் நுட்பத்தில் நடவு பணியை செய்வதால், எலி தாக்குதல் குறைவதோடு மகசூல் அதிகரிக்கிறது. எனவே, வட மாநிலத்தவர்களை விவசாய பணி செய்யும் நிலை உருவாகி உள்ளது.

இதனால், நூறு நாள் வேலை திட்ட பணியாளர்கள் சாகுபடி பணியில் ஈடுபடுத்த, தமிழக அரசு அனுமதி வழங்க வேண்டும் என்பது விவசாயிகளின் கோரிக்கையாக இருந்து வருகிறது.
மேற்கு வங்காளம் மாநிலத்தில் விவசாய பணிகள் முடிந்த பின் பருவமழைக்கு ஏற்றவாறு ஆந்திரா, கர்நாடக ஆகிய மாநிலத்தில் வேளாண் பணியில் ஈடுபட்டு வருகிறோம். தற்போது தமிழ்நாட்டில் சாகுபடி பணியை செய்கிறோம். நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள், இங்கே தங்கி பணி செய்கின்றோம். எங்க மாநிலத்தை விட இங்கு சற்று கூலி அதிகமாகவே கிடைக்கிறது என்றும் தெரிவிக்கின்றனர்.

பேட்டி. 1.பாபு, விவசாய கூலி, மேற்கு வங்காளம்.
2.இன்பராஜ், விவசாயி, பிள்ளபாளையம்.Conclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.