ETV Bharat / state

நொய்யல் ஆத்துப்பாளையம் நீர்த்தேக்கத்தில் இருந்து பாசனத்திற்காக நீர் திறப்பு - dam

நொய்யல் ஆத்துப்பாளையம் நீர்தேக்கத்தில் இருந்து விவசாய பயன்பாட்டுக்காக தண்ணீரை திறந்து வைத்தார் தமிழ்நாடு மின்சார மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை அமைச்சர் செந்தில் பாலாஜி.

Senthil balaji
Senthil balaji
author img

By

Published : Nov 15, 2021, 10:44 PM IST

கரூர் : கரூர் மாவட்டத்திலுள்ள அஞ்சூர், துக்காச்சி, கார்வழி, தென்னிலை முன்னூர், அத்திப்பாளையம், குப்பம், வேட்டமங்கலம், புஞ்சைபுகழூர், புஞ்சை தோட்டக்குறிச்சி, ஆத்தூர், புஞ்சை கடம்பன்குறிச்சி, மண்மங்கலம், குப்புச்சிபாளையம், பஞ்சமாதேவி உள்ளிட்ட கிராமங்களில் உள்ள 19 ஆயிரத்து 450 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுவதற்காக நொய்யல் ஆத்துப்பாளையம் அணை நீர் தேக்கத்தில் தண்ணீர் தேக்கப்பட்டு வருகிறது.

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை காரணமாக திருப்பூர் மாவட்டம் காங்கேயம் சின்ன முத்தூர் அருகே உள்ள கதவணையில் இருந்து சுமார் பத்து கிலோமீட்டர் தொலைவிற்கு ஊட்டுக்கால்வாய் மூலம் கரூர் மாவட்டத்தில் உள்ள நொய்யல் ஆத்துப்பாளையம் நீர்தேக்கத்திற்கு நீர் சேமிக்கப்படுகிறது. இதன் முழு கொள்ளளவான 235.52 மில்லியன் கன அடி நீரை எட்டியுள்ளது.

Water released from Aathupalayam dam
நொய்யல் ஆத்துப்பாளையம் நீர்த்தேக்கத்தில் இருந்து பாசனத்திற்காக நீர் திறப்பு

இதனைக் கருத்தில் கொண்டு பாசன வசதிக்காக நீர்த்தேக்கத்தில் இருந்து நீர் திறந்து விடும் நிகழ்ச்சி இன்று (நவ.15) கரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரபுசங்கர் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தமிழக மின்சார மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி கலந்துகொண்டு மலர் தூவி அணையிலிருந்து நீரை திறந்துவைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் சட்டப்பேரவை உறுப்பினர்கள் இளங்கோ, சிவகாமசுந்தரி ,பொதுப்பணித்துறை கீழ்பவானி வடிநில கோட்ட உதவி செயற்பொறியாளர் சுப்பிரமணியம், உதவிப் பொறியாளர் சபரீஸ்வரன், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் கார்த்திக், புகழூர் வட்டாச்சியர் மதிவாணன் க.பரமத்தி வட்டார வளர்ச்சி அலுவலர் பரமேஸ்வரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் பேசிய தமிழ்நாடு மின்சார மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை அமைச்சர் செந்தில் பாலாஜி, “தமிழ்நாடு முதலமைச்சரின் ஆணைக்கிணங்க ஆத்துப்பாளையம் நீர்தேக்கத்தில் இருந்து தற்பொழுது உள்ள நீர் இருப்பு மற்றும் பருவமழை மூலம் எதிர்பார்க்கப்படும் நீர்வரத்து ஆகியவற்றைக் கணக்கில் கொண்டு நொய்யல் பிரதான கால்வாயில் 75 கண்ணாடி அளவில் தண்ணீர் பாசனத்திற்கு திறந்து விடப்பட்டுள்ளது.

நீர்வரத்து கருத்தில் கொண்டு நொய்யல் பிரதான கால்வாயில் திறக்கப்படும் நீரின் அளவு படிப்படியாக உயர்த்தப்பட்டு கால்வாயில் 137 கனஅடி வரை நீர் விடப்படும். தற்போது திறந்து விடப்பட்டுள்ள தண்ணீரின் காரணமாக புகலூர், மண்மங்கலம் வட்டத்தில் உள்ள சுமார் 19 ஆயிரத்து 450 ஏக்கர் பாசன நிலங்கள் பயன்பெற உள்ளனர்.

தமிழ்நாடு முதலமைச்சர் கரூர் மாவட்டத்துக்கு எண்ணற்ற மக்கள் திட்டங்களை தொடர்ந்து வழங்கி வருகிறார். கரூர் நகராட்சி மாநகராட்சியாக தரம் உயர்த்தி அறிவித்துள்ளார்கள். கரூர் மாவட்டத்திற்கு அரசு வேளாண்மை கல்லூரி இரண்டு கதவணைகள், காவிரி மற்றும் அமராவதி ஆற்றுப் பகுதிகளில் தடுப்பணைகள், 200 ஏக்கர் அளவில் தொழில் வளர்ச்சியை மேம்படுத்த சிப்காட் அமைக்கும் திட்டம் ஆகியவை ஆட்சிப் பொறுப்பேற்ற 5 மாத காலத்திற்குள் கரூர் மாவட்டத்திற்கு தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்த வளர்ச்சி திட்டங்கள் ஆகும். வரக்கூடிய காலங்களில் இன்னும் நிறைய திட்டங்களை கரூர் மாவட்டம் பெரும். அதில் ஆத்துப்பாளையம் நீர்த்தேக்கம் வளர்ச்சியடையக்கூடிய திட்டங்கள் இருக்கும்” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க : விவசாயிகளை ஏமாற்றிய அதிமுக - அமைச்சர் செந்தில் பாலாஜி குற்றச்சாட்டு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.