ETV Bharat / state

அதிமுக அரசின் 3 ஆண்டு சாதனையை விளக்கும் கண்காட்சி தொடக்கம் - கரூர் பேருந்து நிலையம்

கரூர்: அதிமுக அரசின் மூன்று ஆண்டு சாதனையை விளக்கும் வகையில் புகைப்படக் கண்காட்சி போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தொடங்கிவைத்தார்.

Vijayabhaskar inaugurated photo exhibition to mark three years of AIADMK government
அதிமுக அரசின் மூன்றாண்டு சாதனையை விளக்கும் கண்காட்சி!
author img

By

Published : Feb 23, 2020, 8:10 AM IST

கரூர் பேருந்துநிலையத்தில் அதிமுக தலைமையிலான தமிழ்நாடு அரசின் மூன்று ஆண்டு சாதனைகளை விளக்கும் வகையில் கரூர் மாவட்டத்தில் நடைபெற்ற முக்கியமான அரசு விழாக்களில் எடுக்கப்பட்ட புகைப்படங்களைத் தொகுத்து கண்காட்சியாக வைத்துள்ளனர்.

இந்தக் கண்காட்சியை தமிழ்நாடு போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் நேற்று தொடங்கிவைத்தார். மேலும், செய்தி மற்றும் மக்கள் தொடர்புத் துறையின் தமிழ்நாடு திரைப்படப் பிரிவின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள தமிழ்நாடு அரசின் மூன்று ஆண்டு சாதனைகளை விளக்கும் குறும்படத்தை அமைச்சர் பார்வையிட்டார்.

அதிமுக அரசின் மூன்றாண்டு சாதனையை விளக்கும் கண்காட்சி!

இதனையடுத்து, மூன்று ஆண்டு சாதனைகளை விளக்கும் வகையில் தயாரிக்கப்பட்டிருந்த துண்டு பிரசுரங்களைப் பேருந்தில் ஒட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். தமிழ்நாடு அரசால் அண்மையில் தொடங்கிவைக்கப்பட்ட குளிர்சாதனப் பேருந்தின் வசதி குறித்து பொதுமக்களிடம் அமைச்சர் கேட்டறிந்தார்.

இந்நிகழ்வில் கிருஷ்ணராயபுரம் சட்டப்பேரவை உறுப்பினர் கீதா, கரூர் மாவட்ட ஆட்சியர் அன்பழகன், கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாண்டியராஜன், அதிமுக நிர்வாகிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க : பிப்.29 இல் திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆலோசனை கூட்டம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.