ETV Bharat / state

தேவேந்திரகுல வேளாளர் பெயர் அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து உண்ணாவிரதம் - vellalar name opposition fasting

கரூர்: தேவேந்திரகுல வேளாளர் பெயர் அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து மசோதாவை மத்திய அரசு திரும்பப்பெற வலியுறுத்தி கரூரில் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.

கரூர்
கரூர்
author img

By

Published : Feb 16, 2021, 8:44 AM IST

கரூர் 80 அடி சாலையில் உள்ள தனியார் இடத்தில் அனைத்து வேளாளர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஒருங்கிணைப்பாளர் கார்வேந்தன், வ.உ.சி பேரவைத்தலைவர் மகேஸ்வரன், தமிழ் தேசிய கட்சி மாவட்டச் செயலாளர் தமிழ்சேரன், தீரன் சின்னமலை கொங்கு பேரவை ஆனந்த் உள்ளிட்ட 10 பேர் திடீர் உண்ணாவிரத போராட்டத்தை மேற்கொண்டுள்ளனர்.

இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த வேளாளர் சங்கங்கள் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் கார்வேந்தன், "வேளாளர் அமைப்பினரை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தாமல் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தேவேந்திரகுல வேளாளர் பெயர் அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து உண்ணாவிரதம்

மீண்டும் இருதரப்பினரையும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும், மாறாக தேர்தலுக்காக பாஜக பிரச்னை உருவாக்க முயற்சி செய்கிறது. மதம் மாற அனுமதிக்காத பாஜக சாதிவிட்டு சாதி மாறுவதற்கு அவசர அவசரமாக அறிவிப்பு வெளியிட்டு இரு சமூகங்களுக்கிடையே மோதல்களை உண்டாக்க முயற்சிக்கிறது.

எனவே இரு தரப்பையும் அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்தவிட்டால் தொடர் உண்ணாவிரதப் போராட்டங்கள் தமிழ்நாடு அளவில் நடைபெறும்" என்றார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.