ETV Bharat / state

ஓட்டுநர் கண் அயர்ந்ததால் வாகனம் கவிழ்ந்து விபத்து - ஒருவர் உயிரிழப்பு - தேசிய நெடுஞ்சாலையில் வாகனம் கவிழ்ந்து விபத்து

கரூர்: திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வீரராக்கியம் அருகே சுற்றுலா வேன் தலைகீழாக கவிழ்ந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.

van accident in karur national highways
van accident in karur national highways
author img

By

Published : Feb 5, 2020, 9:59 AM IST

காரைக்காலில் நான்கு குடும்பங்களைச் சேர்ந்த 17 பேர் கடந்த 31ஆம் தேதி வேன் ஒன்றை வாடகைக்கு எடுத்துக்கொண்டு கேராவிற்குச் சுற்றுலா சென்றுள்ளனர்.

கேரளாவில் பல்வேறு ஊர்களுக்குச் சென்றுவிட்டு கொச்சியிலிருந்து காரைக்காலுக்கு திரும்பினர். இந்நிலையில், வேன் கரூர் - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வீரராக்கியம் அருகே சென்று கொண்டிருந்தபோது, ஓட்டுநர் கண் அயர்ந்ததால் சாலையின் தடுப்பின் மீது வேன் மோதியது. இதனால் நிலை தடுமாறிய வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

வாகனம் கவிழ்ந்து விபத்து

இந்த விபத்தில் காரைக்கால் பார்வதி ஈஸ்வரன் நகரைச் சார்ந்த முருகபாண்டியன் என்பவர் உயிரிழந்தார். 15க்கும் மேற்பட்டோர் காயங்களுடன் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இவ்விபத்து குறித்து வெள்ளியணை காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

இதையும் படிங்க: அரசுப் பணி வாங்கித் தருவதாகக் கூறி பணமோசடியில் ஈடுபட்ட இருவர் கைது!

Intro:Body:கரூர் - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வீரராக்கியம் அருகே சுற்றுலா வேன் தலைகீழாக கவிழ்ந்த விபத்தில் ஒருவர் உயிரிழப்பு - 15க்கும் மேற்பட்டோர் காயம் - போலீசார் விசாரணை.

பாண்டிச்சேரி மாநிலம் காரைக்காலை சார்ந்த 4 குடும்பத்தினர் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என 17 பேர் கடந்த 31ம் தேதி சுற்றுலா வேனை வாடகைக்கு எடுத்துக் கொண்டு கேராவிற்கு சுற்றுலா சென்றுள்ளனர். கேரளாவில் பல்வேறு ஊர்களுக்கு சென்று விட்டு இறுதியாக கொச்சினிலிருந்து காரைக்காலுக்கு நேற்று இரவு ஊர் திரும்பினர். கரூர் - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வீரராக்கியம் அருகே சென்று கொண்டிருந்த போது ஓட்டுநர் கண் அயர்ந்ததால் சாலையின் தடுப்பின் மீது ஏறி நிலை தடுமாறி எதிர் திசையில் தலைகுப்புற கவிழ்ந்து சுற்றுலா வேன் விபத்துக்குள்ளானது. இதில் காரைக்கால் பார்வதி ஈஸ்வரன் நகரை சார்ந்த முருகபாண்டியன் என்பவர் உயிரிழந்தார். ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என 15க்கும் மேற்பட்டோர் காயங்களுடன் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இவ்விபத்து குறித்து வெள்ளியணை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.