கரூர் தாந்தோன்றிமலை அமராவதி நகரைச் சேர்ந்தவர் கோபால் (28). இவரது 1 வயது மகனின் பிறந்தநாளையொட்டி, கடந்த மே 15ஆம் தேதி மாலை மாயனூரில் உள்ள கோயிலுக்குச் சென்றார். இவருடன் இவரது நண்பரான சத்தியமூர்த்தி நகரைச் சேர்ந்தவர், அங்கமுத்து மகன் சௌந்தரராஜன்(23), இருசக்கர வாகனத்தை ஓட்டிச் சென்றுள்ளார்.
இருவரும் கோவிலுக்குச் சென்றுவிட்டு, கரூர் நோக்கி இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருக்கையில், கரூர் திருச்சி நெடுஞ்சாலையில் உள்ள லிங்கத்தூர் மேம்பாலம் அருகே முன்னால் சென்ற லாரியை முந்தி செல்ல முயன்றுள்ளனர். அப்போது லாரியின் பின்புறம் மீது மோதி சம்பவ இடத்திலேயே இருவரும் உயிரிழந்தனர்.
இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வெள்ளியணை காவல்துறையினர் உடலைக் கைப்பற்றி கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும், இந்த விபத்து குறித்து வெள்ளியணை காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: கரோனா பரவலைத் தடுக்க வேப்பிலை தோரணம் கட்டிய கிராம மக்கள்!