ETV Bharat / state

டிராக்டர் மீது லாரி மோதி விபத்து - லாரி ஓட்டுநர் உயிரிழப்பு! - தமிழ் விபத்து செய்திகள்

கரூர்: மண்மங்கலம் சாலை பிரிவு அருகே அமைந்துள்ள சேலம் - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் டிராக்டர் மீது லாரி மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.

Truck collision on tractor-lorry driver's death

author img

By

Published : Jul 11, 2020, 5:09 PM IST

கரூர் மாவட்டம், செம்மடை அருகேவுள்ள சேலம் - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் லோடு ஏற்றி வந்த டிராக்டர் மீது பின்னால் அதிவேகமாக வந்த லாரி மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் லாரியின் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதையடுத்து அருகிலிருந்தவர்கள் உடனடியாக காவல்துறையினருக்குத் தகவல் அளித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வாங்கல் காவல்துறையினர், தீயணைப்பு துறையின் உதவியுடன் உயிரிழந்த லாரி ஓட்டுநரின் உடலை மீட்டு, உடற்கூறு ஆய்வுக்காக கரூர் அரசு மருத்துவமனை மருத்துவக்கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதைத்தொடர்ந்து இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்திவருகின்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.