ETV Bharat / state

டிராவல்ஸ் உரிமையாளர் தற்கொலை: பஸ் கூண்டு கட்டும் நிறுவன உரிமையாளர் கைது

கரூர்: டிராவல்ஸ் உரிமையாளர் தற்கொலை செய்த வழக்கில் அவருக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்திய பஸ் கூண்டு கட்டும் நிறுவன உரிமையாளரைக் கைது செய்த காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பஸ் கூண்டு கட்டும் நிறுவன உரிமையாளர் கைது

author img

By

Published : Dec 12, 2020, 3:02 PM IST

கரூர் மாவட்டம் பசுபதிபாளையம் அருகேயுள்ள அருணாசலம் நகரைச் சேர்ந்த பாஸ்கர், சுதா டிராவல்ஸ் என்ற நிறுவனத்தை நடத்தினார். கரோனா பொதுமுடக்கத்தில் இவருக்கு பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்று முன்தினம் (டிச. 10) நள்ளிரவு சவாரிக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பிய பாஸ்கர், தான்தோன்றி மலையில் உள்ள கரூர் கலெக்டர் அலுவலகம் முன்பு திடீரென வேனை நிறுத்திவிட்டு கீழே இறங்கினார்.

அதன் பின்னர் தனது உடலில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக்கொண்டார். இதில் உடல் கருகி சம்பவ இடத்திலேயே பாஸ்கர் உயிரிழந்தார். இது தொடர்பாக தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தாந்தோணிமலை காவல் துறையினர் அவரது உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்காக அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணையும் நடத்திவந்தனர். இந்த விசாரணையில் பாஸ்கர் தனது வாட்ஸ் அப் மூலம் நண்பர்களுக்கு அனுப்பிய 4 பக்க கடிதத்தினைக் காவல் துறையினர் ஆய்வு செய்தனர். அந்தக் கடிதத்தில், கரூர் பஸ் கூண்டு கட்டும் நிறுவனத்தில் தனது வேனை வேலைக்கு விட்டதோடு, 2 லட்சம் பணத்தை செலுத்தியதாகவும், வேலையை முடிக்காமல் பணத்தையும் திருப்பி தராமல் உரிமையாளர் ஏமாற்றிவிட்டார் என்றும் பாஸ்கர் குறிப்பிட்டிருந்தார்.

அதன் அடிப்படையில் பஸ் கூண்டு கட்டும் நிறுவனத்தின் உரிமையாளர் கார்த்திக் (40) என்பவரை காவல் துறையினர் கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.