கரூர் மாவட்டத்தில் வரும் 21ஆம் தேதி முதலமைச்சர் பழனிசாமி கரோனா தொற்று குறித்த ஆய்வுக் கூட்டத்திற்கு வருகை தரவுள்ளார். இதனையொட்டி இந்நிகழ்ச்சியில் பங்கேற்கும் அனைவருக்கும் கரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதன் ஒரு பகுதியாக, தமிழ்நாடு போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் நேற்று (ஆக.17) கரோனா பரிசோதனை மேற்கொண்டார்.
இப்பரிசோதனை சான்றிதழ் இன்று(ஆக.18) மாலை வெளியானதில், அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் மற்றும் அவரது மனைவி குழந்தைகள் உட்பட அனைவருக்கும் கரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அமைச்சருக்கு தொற்று உறுதியான நிலையில், அனைத்து பரிசோதனைகளும் தற்காலிகமாகத் தடை செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக, ஆகஸ்ட் 21-ஆம் தேதி கரூர் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறவுள்ள முதலமைச்சரின் ஆய்வுக் கூட்டம் நடைபெற வாய்ப்பில்லை எனக் கூறப்படுகிறது. மேலும், திமுக எம்எல்ஏ செந்தில் பாலாஜிக்கும், கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில் திருச்சி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஸ்டெர்லைட் ஆலை தீர்ப்பு: இனிப்பு வழங்கி கொண்டாட்டம்!