கரூர்: உரிய அனுமதியின்றி செல்போனில் குறுந்தகவல் அனுப்பி அதிமுகவுக்கு ஆதரவு திரட்டிய அதிமுக நிர்வாகி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கரூர் மாவட்டத்தில் தேர்தல் விதிமுறை மீறல் குறித்து கண்காணிக்க தேர்தல் பறக்கும் படையினர் முழுவீச்சில் செயல்பட்டு வருகின்றனர். இதனிடையே அதிமுக பிரமுகர் சுகன்யா மூர்த்தி என்பவர், கரூர் மாவட்டத்தில் உள்ள வாக்காளர்களுக்கு அதிமுக ஆதரவாக குறுஞ்செய்தி அனுப்பி வாக்கு சேகரிப்பதாக ஏப்ரல் 1-ஆம் தேதி கரூர் நகர காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்து காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.