கரூர்: கரூர் மாநகரில் ஜவுளி உற்பத்தி ஏற்றுமதி என 800 நிறுவனங்கள், 150 நூல் விநியோகஸ்தர்கள், டையிங் மற்றும் பிரிண்டிங் நிறுவனங்கள், சிறு தையல் நிறுவனங்கள், ஜவுளி தொழில் சார்ந்த நிறுவனங்கள் உள்ளிட்டோர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு உள்ளனர்.
பருத்தி நூல் கொள்முதல் விலையைக் குறைக்க வலியுறுத்தி மே 16 மற்றும் 17ஆம் ஆகிய தேதிகளில் அடையாள வேலைநிறுத்தம் மேற்கொள்ள கரூர் ஜவுளி உற்பத்தியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளனர். நூல் உற்பத்தியாளர்கள் உற்பத்தி செய்த நூலை சந்தைப்படுத்தாமல் இருப்பு வைத்து பதுக்கி வருகின்றனர். இதனால், சந்தையில் தேவைக்கேற்ப நூல் கிடைப்பதில்லை. அதேசமயம், நூல் ஏற்றுமதிக்கு மத்திய அரசு மானியம் அளித்து வருகிறது.
வேலைநிறுத்தப் போராட்டம்: இதனால் மானியத்தை நிறுத்தி, ஏற்றுமதிக்கு தடை விதிக்கவேண்டும். அப்போதுதான் சந்தைக்கு நூல் வரத்து சீராக இருக்கும். அதன் மூலம் உற்பத்தியை இயல்பாக நடத்துவதற்கு வாய்ப்பாக இருக்கும் என மத்திய- மாநில அரசுகளுக்கு கரூரில் உள்ள ஜவுளி உற்பத்தி ஏற்றுமதியாளர் சங்கத்தினர் கோரிக்கையை முன்வைத்துள்ளனர். ஆனால், தற்போது உள்ள சூழலில் நாள்தோறும் நூல் விலை ஏறி வருவதால், ஜவுளி உற்பத்தி மற்றும் ஏற்றுமதி செய்ய முடியாதநிலை ஏற்பட்டுள்ளது. நூல் விலையைக் குறைக்க வலியுறுத்தி இன்று மே 16 மற்றும் நாளை 17 தேதி ஆகிய நாட்களில் கவன ஈர்ப்பு வேலை நிறுத்தம் செய்ய முடிவு எடுக்கப்பட்டது.
ரூ.100 கோடிக்கு உற்பத்தி பாதிப்பு: இதன் ஒருபகுதியாக கரூர் மாநகரில் ஜவுளி உற்பத்தி ஏற்றுமதி என 800 நிறுவனங்கள், 150 நூல் விநியோகஸ்தர்கள், டையிங் மற்றும் பிரிண்டிங் நிறுவனங்கள், சிறு தையல் நிறுவனங்கள், ஜவுளி தொழில் சார்ந்த நிறுவனங்கள் உள்ளிட்ட சுமார் இரண்டரை லட்சம் தொழிலாளர்கள் இந்த வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு உள்ளனர்.
சுமார் 2½ லட்சம் ஊழியர்கள் பங்கேற்றுள்ள இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தின் காரணமாக, சுமார் ரூ.100 கோடி அளவில் உற்பத்தி பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது என ஏற்றுமதியாளர்கள் மற்றும் ஜவுளி உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் ஆயிரக்கணக்கானோருக்கு வேலையிழப்பும் ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க: மெரினாவில் நினைவு சின்னம் எழுப்ப அரசாணை வெளியிட வேண்டும் - மே 17 இயக்கம் கோரிக்கை