கரூர் மாவட்டம் தெற்குத் தெருவில் வசித்து வந்தவர் ராஜு (56). இவர் அப்பகுதியிலுள்ள கடையில் டீ மாஸ்டராக பணியாற்றி வந்தார். இவருக்கு திருமணமாகி 25 வருடங்கள் கடந்த நிலையிலும் குழந்தை இல்லை எனக் கூறப்படுகிறது.
இவர், கடந்த ஓராண்டு காலமாக சொரியசிஸ் எனும் தோல் நோய்க்கு சிகிச்சை பெற்று வந்துள்ளார். ஆனால் நோயின் தீவிரம் அதிகரித்து, உடல் முழுவதும் பரவியுள்ளது. இதனால் மனமடைந்த அவர் நேற்று (ஜூலை 17) வீட்டில் தூக்கிட்டு கொண்டார்.
டீ மாஸ்டர் தற்கொலை
இதனைக் கண்ட பக்கத்துவீட்டார் தூக்கில் தொங்கியவரை காப்பாற்றி கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சேர்த்தார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து கரூர் காவல் நிலையத்தில் ராஜூ மனைவி கிருஷ்ணவேணி அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: குறும்படம் எடுப்பதில் ஆர்வம் காட்டிய கணவன் - மனைவி தற்கொலை