கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அருகேயுள்ள மணவாசி பகுதியில் அரசு டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் (மே. 8) வழக்கம் போல் இரவு 9 மணி அளவில் மது விற்பனைப் பணத்தை எடுத்துக் கொண்டு, மதுக்கடை ஊழியர்கள் டாஸ்மாக் கடையை பூட்டிவிட்டுச் சென்றனர்.
நேற்று (மே. 9) காலை 8 மணியளவில் ஊழியர்கள் வந்து கடையை திறந்து பார்த்த போது, டாஸ்மாக் கடையின் பின்பக்க சுவரைத் துளையிட்டு அடையாளம் தெரியாத நபர்கள் மதுபாட்டில்களைத் திருடிச் சென்றது தெரிய வந்தது.
இதுகுறித்து ஊழியர்கள் உடனடியாக மாயனூர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.
முதல்கட்ட விசாரணையில், ரூ.40 ஆயிரம் மதிப்புள்ள 142 மதுபாட்டில்கள் திருடுபோனது தெரிய வந்துள்ளது. இந்த திருட்டுத் தொடர்பாக காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: நீண்ட வரிசையில் நின்று மதுபானங்கள் வாங்கிச் சென்ற மதுப்பிரியர்கள்