கரூர் மாவட்டம் அரசு கலைக்கல்லூரி பேராசிரியர் இளங்கோவன் என்பவர் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறி மார்ச் 26ஆம் தேதி மூன்று சட்டப்பிரிவுகளின் கீழ் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.
அந்த வழக்கு மீதான விசாரணை, இன்று கரூர் குடும்ப நல நீதிமன்றத்தில் பிருந்தா கேசவசாரி முன்னிலையில் நடைபெற்றது. இந்நிலையில் பேராசிரியர் இளங்கோவனை ஜாமினில் விடுவிக்காமல், கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என வலியுறுத்தி கல்லூரி மாணவ, மாணவிகள் ஐம்பதுக்கும் மேற்பட்டோர் நீதிமன்றத்தின்முன்பு கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
இதைத்தொடர்ந்து பேராசிரியர் இளங்கோவனின் ஜாமீன் மனுவை நீதிபதி கேசவசாரி தள்ளுபடி செய்து மீண்டும் அவரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டுள்ளார்.