கரூர் மாவட்டத்தில் தாந்தோணி மலை பகுதியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியில் 17 இளங்கலை துறை செயல்பட்டு வருகிறது. இந்த துறைகளுக்கான முதலாமாண்டு மாணவ மாணவிகளுக்கு ஆயிரத்து 280 காலியிடங்கள் உள்ளன.
ஏற்கனவே மாணவர்கள் சேர்க்கை இணையம் மூலம் விண்ணப்பித்து அதற்கான தேர்வுகள் நடைபெற்று முடிந்தன. இருப்பினும், தற்போது உடற்கல்வி கோட்டா மூலம் 38 மாணவ, மாணவியர்களுக்கு இடம் ஒதுக்கப்பட்டு, இதற்காக 650 மாணவ மாணவியர் விண்ணப்பித்திருந்தனர். இதில் 40 நபர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கான நேர்முகத்தேர்வு கல்லூரியில் உள்ள உடற்கல்வி துறை அலுவலகத்தில் நடைபெற்றது.
கல்லூரி முதல்வர் கௌசல்யா தேவி, தேர்வு நெறியாளர் ராதாகிருஷ்ணன், நுண்கலை மன்ற ஒருங்கிணைப்பாளர் ராஜன் மற்றும் உடற்கல்வி துறை இயக்குநர் ராஜேந்திரன் ஆகியோர் நேர்முகத்தேர்வை வழிநடத்தினர்.