கரூர் மாவட்டம் மாயனூரை அடுத்த சித்தலவாய் ஊராட்சிக்குள்பட்ட ஆறாவது வார்டில் போட்டியிட்டு வெற்றிபெற்றவர் கிருஷ்ணமூர்த்தி. தேர்தல் வெற்றியை அடுத்து நடைபெற்ற ரகசிய தேர்தலில் துணைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு பதவியும் ஏற்றுக் கொண்டார்.
இந்த நிலையில் கடந்த 7ஆம் தேதி அவரது கைப்பேசிக்கு தொடர்புகொண்ட வட்டார வளர்ச்சி அலுவலர்கள், வட்டார அலுவலகத்திற்கு வரும்படி அழைத்துள்ளனர். அப்போது நீங்கள் உள்ளாட்சித் தேர்தலில் நின்று வெற்றிபெற்ற வார்டு, பெண்களுக்கென்று ஒதுக்கப்பட்டது என்றும், நீங்கள் வெற்றிபெற்றது செல்லாது என்றும் தெரிவித்து அதற்காக மாவட்ட ஆட்சியரும் தேர்தல் அலுவலருமான அன்பழகன் வழங்கிய கடிதத்தையும் அவரிடம் அலுவலர்கள் வழங்கியுள்ளனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிருஷ்ணமூர்த்தி சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்குத் தொடர்ந்தார். அதனை விசாரித்த உயர் நீதிமன்றம் சரமாரியாக கேள்வி எழுப்பியதுடன், ஆட்சியரின் உத்தரவிற்கு இடைக்காலத் தடைவிதித்து உத்தரவிட்டுள்ளார்.
இதனையடுத்து சித்தலவாய் ஊராட்சிக்குள்பட்ட பகுதியில் கிருஷ்ணமூர்த்தி ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.
இதையும் படிங்க : வந்தவாசி அருகே சத்துணவு சாப்பிட்ட மாணவர்களுக்கு வாந்தி மயக்கம்