கரூர் மாவட்டம் பேருந்து நிலையம் அருகில் இருக்கக்கூடிய தனியார் உணவகத்தில், திருச்சி சரக காவல் துறை சார்பில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான பாதுகாப்பான மற்றும் வன்முறையற்ற சமுதாயம் உருவாக்க புதிய திட்டத்தின் கீழ் கேடயம் வெளியிடப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் கரூர் மாவட்ட முதன்மை துணை நீதிபதி சசிகலா மற்றும் மாவட்ட கூடுதல் கண்காணிப்பாளர் சிலம்பரசன், குழந்தைகள் பாதுகாப்பு கடத்தல் பிரிவு கூடுதல் கண்காணிப்பாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இதில் பாலியல், வன்முறை கொடுமைகளுக்கு எதிராக சிறப்பாக செயல்பட்ட ஆய்வாளர், துணை ஆய்வாளர்களுக்கு பாராட்டுகளும் கேடயம் வழங்கப்பட்டது.
கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பகலவன் பேசுகையில், “ஆண்கள் அனைவரும் பெண்களுக்கு முதல் கேடயமாக விளங்க வேண்டும், ஏனென்றால் குற்றங்கள் அனைத்தும் வீட்டில் இருந்தே தொடங்குகிறது. வீட்டைத் தூய்மை செய்து நாட்டை தூய்மை செய்யலாம். இரண்டாவது கேடயம் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை எதிர்க்க விழிப்புணர்வை ஏற்படுத்துவது” என தெரிவித்தார்