கரூர்: உப்பிடமங்கலம் சமத்துவபுரத்தை சேர்ந்தவர் சரவணன் (37). கூலித்தொழிலாளியான இவர் 2019ஆம் ஆண்டு அதே பகுதியைச் சேர்ந்த 8 வயது சிறுமியை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின்பேரில் வெள்ளியணை காவல்துறையினர் அவர் மீது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
இது தொடர்பான வழக்கு கரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டு, கரூர் மகளிர் விரைவு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது.
இந்த வழக்கில் நீதிபதி நேற்று (செப். 20) அளித்த தீர்ப்பில், "குற்றவாளி சரவணனுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.50 ஆயிரம் அபராதமும், அபராத தொகையை கட்டத் தவறினால் மேலும் ஒராண்டு சிறைத்தண்டனை வழங்கப்படும்" என உத்தரவிட்டார்.
குழந்தைகள், பெண்கள் மீதான வன்கொடுமை வழக்குகள் விரைந்து விசாரிக்கப்பட்டு தீர்ப்பு வழங்கப்பட்டு வருவது, குற்றங்களை குறைக்க வழி வகுக்கும் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: தொழிற்படிப்புகளை நடத்தத் தடை விதிக்கக் கோரிய வழக்கு ஒத்திவைப்பு