தமிழ்நாடு முழுவதும் உள்ள காவலர்களின் மன உறுதியை அதிகரிக்கும் வண்ணம், ஆயுதப்படை ஆண், பெண் காவலர்களுக்கு தற்காப்புக் கலை பயிற்சி வழங்க திருச்சி சரக காவல் துணைத்தலைவர் ஆனி விஜயா உத்தரவிட்டிருந்தார்.
அதன்படி, நேற்று (அக்.11) கரூர் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில், காவல் கண்காணிப்பாளர் பகலவன் தலைமையில் காவலர்களுக்கு தற்காப்பு கலைகள் குறித்த பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டன. தற்காப்புக் கலை நிபுணர்களைக் கொண்டு காவலர்களுக்குத் தற்காப்புக் கலைகள் (கராத்தே) பயிற்சி சமூக இடைவெளியுடன் கற்றுத் தரப்பட்டது.
மேலும் தற்காப்புக் கலை குறித்த பயிற்சி வகுப்பினை தொடர்ந்து காவலர்களுக்குக் கவாத்து பயிற்சியும் நடைபெற்றது. இதனை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பார்வையிட்டு ஆயுதப்படை காவலர்களுக்கு அறிவுரை வழங்கினார். கவாத்து பயிற்சியின் நிறைவாக கரோனா தடுப்பு பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக உடலில் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க அனைவருக்கும் கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டது.
இதையும் படிங்க: தற்காப்பு கலை பயிற்சி பெற்ற நெல்லை காவலர்கள்!