ETV Bharat / state

"குற்றவாளிகளை கைது செய்ய திமுக தயங்குகிறது" சீமான் சாடல்..! - Nam tamilar katchi

Seeman reacts on Kodanad Case: கோடநாடு, தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு போன்ற விவகாரத்தில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை நெருங்க திமுக அரசு தயங்குவதாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கரூரில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் குற்றச்சாட்டினார்.

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 29, 2023, 11:35 AM IST

"குற்றவாளிகளை கைது செய்ய திமுக தயங்குகிறது" சீமான் சாடல்..!

கரூர்: தமிழகம் முழுவதும் நாம் தமிழர் கட்சி சார்பில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் அக்கட்சியின் முதன்மை ஒருங்கிணைப்பாளர் சீமான், கரூர் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக ஆகஸ்ட் 29ஆம் வருகை புரிந்துள்ளார்.

இந்நிலையில் கரூர் ஹேமலா நட்சத்திர விடுதியில் செய்தியாளர்கள் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அப்போது செய்தியாளர்களை சந்தித்த சீமான் தன்னிடம் எந்த செய்தியும் இல்லை எனவும், செய்தியாளர்களிடம் ஏதேனும் கேள்விகள் இருந்தால் கேட்கலாம் என கூறினார்.

கூட்டணி வைப்பது எப்போது: அதனை தொடர்ந்து செய்தியாளர்கள் கேட்ட ஒவ்வொரு கேள்விகளுக்கும் பதிலளித்தார். சுமார் 40 நிமிடங்களுக்கு மேல் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. சமீபத்தில் ஒத்த கருத்துடைய கட்சியுடன் கூட்டணி வைத்து தேர்தலில் போட்டியிட தயார் எனக் கூறியது குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, "தமிழகத்திலும் இந்தியாவிலும் ஒத்த கருத்துடைய கட்சி எதுவும் இல்லை. ஊடகவியலாளர்கள் கேட்ட கேள்விக்கு பதில் அளித்தேன். தேர்தலில் கூட்டணி என்பது வாக்காளர்களுக்கு பணம் அளித்து வெற்றியை நிர்ணயிக்கலாம் என்ற நிலை ஏற்பட்டு விட்டது. கூட்டணியில் சேர உள்ள கட்சிகளும் பெரிய கட்சியுடன் கூட்டணி வைத்துக் கொண்டால் ஒன்று இரண்டு இடத்தில் வாக்காளர்களுக்கு பணத்தை கொடுத்து வெற்றி பெற செய்து விடுவார்கள்" என்று பேசினார்.

மேலும், "நாம் தமிழர் கட்சியுடன் ஒத்த கருத்துள்ள கட்சிகள் கூட்டணி வைக்க வேண்டும் என்றால், அதற்கு நீண்ட காலம் தேவைப்படும். காரணம் குறைந்தபட்சம் 10 சதவீத வாக்கு வங்கியை நாம் தமிழர் கட்சி பெற்ற பின்பு தான் கூட்டணி வைக்க பிற கட்சிகள் முன் வருவார்கள். தேமுதிக என்ற கட்சி வாக்கு வங்கியை நிரூபித்து காட்டிய பிறகு தான் மக்கள் நல கூட்டணி என்ற அணியை உருவாக்கி கூட்டணி வைத்து தேர்தலை சந்தித்தார்கள். தற்போது நாம் தமிழர் கட்சி ஏழு சதவீத வாக்கு வங்கியை வைத்துள்ளது விரைவில் இது கூடும். அதன் பின்னரே அது நடக்கும்" என்று தெரிவித்தார்.

அதிமுக எழுச்சி மாநாடு குறித்து பேசிய சீமான்: மதுரை அதிமுக எழுச்சி மாநாடு குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு பதில் அளித்த சீமான், "எம்ஜிஆர் ஜெயலலிதாவுக்கு பிறகு எடப்பாடி பழனிசாமியிடம் கட்சி, சின்னம், கொடி ஆகியவை நீதிமன்றம் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன் பிறகு நடைபெற்ற மாநாட்டில் தொண்டர்கள் எழுச்சி ஏற்பட்டுள்ளது. இது அடுத்துவர உள்ள தேர்தலில் அதிமுகவுக்கு பயன் தரும், அவ்வளவுதான் அதில் கூற முடியும்" என்று பதிலளித்தார்.

சிஏஜி அறிக்கை குறித்து: மத்திய அரசு 9 ஆண்டுகளில் நிறைவேற்றிய திட்டங்களில் இந்திய தலைமை கணக்கு தணிக்கையாளர் (சிஏஜி) அறிக்கையில் ஊழல்கள் நடைபெற்றுள்ளதாக அறிக்கை வெளியாகி இருப்பது குறித்து கேட்டதற்கு பதில் அளித்த சீமான், "2ஜி விவகாரத்தில் அரசுக்கு இழப்பு என்றுதான் கூறப்பட்டது தவிர ஊழல் என்று கூறப்படவில்லை, அதுபோலத்தான் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சிஏஜி அறிக்கையில் ஊழல் என்று குறிப்பிடப்படவில்லை என கூறுகிறார்.

யாரால் அரசுக்கு இழப்பு யாருக்காக இழப்பு ஏற்படுத்தப்பட்டது என்பதை மக்கள் ஆராய வேண்டும். ஆளுங்கட்சியும் எதிர்க்கட்சியும் மாறி மாறி ஊழல் என குற்றம் சாட்டி வருகின்றனர். இருவரையும் மக்கள் தூக்கி எறிய வேண்டும். திமுகவில் உள்ள அமைச்சர்கள் ஊழல் செய்தார்கள் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பட்டியல் வெளியிடுகிறார். ஆனால் அதிமுகவில் முன்னாள் அமைச்சர்கள் முதல்வர்கள் ஊழல் செய்த பட்டியலை ஏன் வெளியிடவில்லை.

அதிமுக என்ன புனிதமான கட்சியா கரைபடாத நபர்கள் கட்சியில் உள்ளனரா, பாஜகவுடன் கூட்டணி வைத்ததால், ஊழல் செய்தவர்கள் பட்டியலில் அதிமுகவை சேர்ந்தவர்களை விட்டுவிட்டார் அண்ணாமலை. பாரதிய ஜனதா கட்சியில் கடுமையான குற்றங்களை செய்த தமிழகத்தில் உள்ள அனைத்து ரவுடிகள் கட்சியில் உறுப்பினர்களாக சேர்ந்து பாதுகாப்பு அளித்து வருகின்றனர்" என குற்றம் சாட்டினார்.

கோடநாடு கொலை வழக்கு குறித்து பேசும் போது: தொடர்ந்து பேசிய அவர், "கோடநாடு கொலை வழக்கு குறித்து ஏன் அண்ணாமலை இதுவரை பேசவில்லை. கொடைநாட்டில் கொலைகள் நடைபெற்றது உண்மையா இல்லையா? பத்திரிக்கையாளர்களே கூறுங்கள். ஆறு பேர் கொலை செய்யப்பட்டு இருக்கிறார்கள். கொலை செய்தவர்கள் யார்? எதற்காக கொலை செய்தார்கள் என்பது குறித்து ஏன் அண்ணாமலை பேசவில்லை.

தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் குடியிருந்த வீடு அங்கு ஆறு பேர் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு இருக்கிறார்கள், கொடநாடு பகுதி முழுவதும் தடையற்ற மின்சாரம் உள்ள பகுதி அங்கு ஒரு மணி நேரமாக மின்சார தடை ஏற்படுத்தப்பட்டு கொலை நடைபெற்று உள்ளது. தன்னை நேர்மையானவராக காட்டிக் கொள்ளும் அண்ணாமலை கோடநாடு கொலை வழக்கு குறித்து இதுவரை ஏன் கேள்வி எழுப்பவில்லை" என சாடினார்.

மேலும், "கோடநாடு கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட முக்கிய சாட்சி ஒருவர் தன் உயிருக்கு இன்று வரை அச்சுறுத்தல் உள்ளது என்று கூறியுள்ளார். அவர் துணிந்து ஊடகங்களில் தனக்கு அச்சுறுத்தல் உள்ளது என கூறியிருப்பதை வரவேற்கிறேன், அவருக்கு அரசு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும். எதிர்க்கட்சியாக திமுக இருந்தபோது தேர்தல் பிரச்சாரத்தில் 2 மாதத்தில் கொடநாடு கொலை வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் கைது செய்து சிறைக்கு அனுப்பப்படுவார்கள் என தற்போதைய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் செய்தார்.

இதுவரை ஏன் தமிழக முதலமைச்சர் கோடநாடு குற்றவாளிகளை கைது செய்யவில்லை. இதே போல தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் காவல்துறையை துப்பாக்கிச் சூடு நடத்த அனுமதித்த நபர் யார் என்று விசாரித்து குற்றவாளி கூண்டில் இன்று தமிழக அரசு நிறுத்தி இருக்க வேண்டும். துப்பாக்கி சூட்டில் இறந்து போனவர்கள் குறித்த அருணா ஜெகதீசன் அறிக்கையில் அனைத்து விவரங்களும் அரசுக்கு சமர்ப்பித்து ஏழு மாதங்கள் கடந்து விட்டது ஏன் நடவடிக்கை இன்னும் எடுக்கப்படவில்லை" என கேள்விகளை எழுப்பினார்.

"திமுக அரசு, முந்தைய அதிமுக அரசில் குற்றம் செய்தவர்களுக்கு துணை போகிறது. துப்பாக்கிச் சூடு சம்பவத்தின் போது போலீசார் தயார் நிலையில் நிறுத்தப்பட்டு இருந்தனர் என்பது முன் ஏற்பாடு போல இருந்தது. கலவரம் நடைபெற்றதாக கூறும் போலீசார், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு தான் துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தை நடத்தி இருக்க வேண்டும் அவ்வாறு அங்கு நடைபெறவில்லை.

"அநியாயத்தை எதிர்த்துப் போராடிய மக்களை முந்தைய அரசு சுட்டு வீழ்த்தியுள்ளது. இன்று நாட்டில் காக்கை, குருவி கூட சுட்டுக் கொள்ள சட்டத்தில் இடமில்லை, அவ்வளவு கேவலமா தமிழனின் உயிர். கேட்க நாதியில்லாமல் இருப்பவர்களுக்கு நாங்கள் போராடி வருகிறோம். ஒரு ஐந்து ஆண்டு மட்டும் ஆட்சியை நாம் தமிழர் கட்சியிடம் வழங்கினால் அனைத்தையும் மாற்றி காட்டுகிறோம்" என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: ஒரு கடனை அடைக்க மற்றொரு கடன்.. சுய உதவிக் குழுவால் குடும்பங்கள் சீரழிவா? - புதுக்கோட்டையில் நடந்தது என்ன?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.