கரூர் மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில், ராமேஸ்வரம் பட்டி பகுதியைச் சேர்ந்த ரக்ஷனா என்ற மாணவி 7ஆம் வகுப்பு படித்து வருகிறார். புவி வெப்பமயமாதலை தடுக்கவும், இயற்கை வளத்தை அதிகப்படுத்தவும் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை சென்று, மீண்டும் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை 8,000 கிலோ மீட்டர் தூரத்தில், நான்கு லட்சம் விதை பந்துகளை ஒரு கிலோமீட்டருக்கு 50 விதைப்பந்து வீதம் ஆறுவகையான விழிப்புணர்வு பிரச்சாரம் செய்து சாதனை படைத்துள்ளார்.
குழந்தை தொழிலாளர் முறை ஒழித்தல், பெண்கல்வி ஊக்குவித்தல், பாலியல் வன்கொடுமைகளைத் தடுத்தல், அனைவருக்கும் விதைப்பந்து, தூவும் பறவை இனம் காக்க, இயற்கை விவசாயம் இருத்தல் போன்ற ஆறு வகையான ஒழிப்பு பிரச்சாரம் இந்தியா முழுவதும் சென்று 30 நாட்கள் பயணம் மேற்கொண்டார்.
அவர் சென்றதற்கு அடையாளமாக 30 நாட்களில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை வீடியோவாக மாற்றி பள்ளி முதல்வர், தமிழ்நாடு முதலமைச்சர் பழனிசாமி, பிரதமர் மோடி ஆகியோருக்கு தலா ஒரு காப்பி வழங்கியுள்ளார்.