சாலை பாதுகாப்பு குறித்தும் சாலையைப் பயன்படுத்தும் வாகன ஓட்டிகளும் விபத்தில்லாமல் பயணிக்க தமிழ்நாடு அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்திவருகிறது. மேலும் சாலை விதிகளை மீறுபவர்களுக்கு கடுமையான அபராதங்களை விதித்தும்வருகிறது.
பாதுகாப்பான பயணத்திற்கு தலைக்கவசம், சீட் பெல்ட் அணியவேண்டும் என்ற பொதுமக்களிடம் தொடர்ச்சியாக வலியுறுத்தி தமிழ்நாடு காவல் துறையினரும் போக்குவரத்து காவல் துறையினரும் பல விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்துகின்றனர்.
அதன் அடிப்படையில் இன்று கரூர் பேருந்து நிலையம் அருகே போக்குவரத்து காவல் துறையினர் பசுபதீஸ்வரர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் மாணவிகளுடன் இணைந்து தலைக்கவசம் அணிந்து வந்த வாகன ஓட்டிகளுக்கு ரோஜா மலர்களும் இனிப்புகளும் அளித்து வாழ்த்து தெரிவித்தனர்.
இதனை தொடர்ந்து வாகன ஓட்டிகளும், மாணவிகளும், சாலை பயணம் சிறந்த பயணமாக அமைய சாலை விதிகளை கடைபிடிப்போம் என உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
இதையும் படிங்க: 100 பேருக்கு இலவச தலைக்கவசம் வழங்கிய சூர்யா ரசிகர்கள்!