ETV Bharat / state

பூட்டிய வீட்டுக்குள் கைவரிசை காட்டிய கொள்ளையர்கள் - பூட்டிய வீட்டுக்குள் கைவரிசை காட்டிய கொள்ளயர்கள்

கரூர்: க.பரமத்தி அருகே வீட்டின் பூட்டை உடைத்து எட்டு சவரன் தங்க நகைகளைத் திருடிய கொள்ளையர்களை காவல் துறையினர் தேடிவருகின்றனர்.

gold robbery
பூட்டிய வீட்டுக்குள் கைவரிசை காட்டிய கொள்ளயர்கள்: காவல் துறையினர் வலைவீச்சு
author img

By

Published : Apr 28, 2021, 10:36 AM IST

கரூர் மாவட்டம் க.பரமத்தி அருகேயுள்ள பவுத்திரம் ஊராட்சியைச் சேர்ந்த பைனான்சியரான முத்துசாமி, வேலை நிமித்தமாக வெளியூர் சென்றிருந்தார்.

அப்போது வீட்டில் இருந்த இவரது பெற்றோர் சரஸ்வதி, கந்தசாமி ஆகியோர் வீட்டை பூட்டிவிட்டு தோட்டத்திற்குச் சென்றுவிட்டு திரும்பிவந்து பார்த்தபொழுது, வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

வீட்டுக்குள் சென்று பார்த்தபொழுது பீரோவிலிருந்த எட்டு சவரன் தங்க நகையைக் காணவில்லை. இது குறித்து க.பரமத்தி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில், சம்பவ இடத்திற்கு வந்த காவல் ஆய்வாளர் ரமாதேவி தலைமையிலான காவலர்கள், கைரேகை வல்லுநர்கள் உதவியுடன் தடயங்களைச் சேகரித்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

இதையும் படிங்க: இளம்பெண் கழுத்து அறுத்துக் கொலை: காதல் விவகாரமா?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.