தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மருத்துவ கல்லூரிகளுக்கு அடிக்கல் நாட்டிவருகின்றார். அந்த வகையில் கரூர் மாவட்டம் காந்திகிராமம் பகுதியில் இருக்கும் அரசு மருத்துவமனை, மருத்துவக் கல்லூரி வளாகத்தை திறப்பதற்காக வரும் 5ஆம் தேதி எடப்பாடி பழனிசாமி வரவிருக்கிறார்.
அதற்காக கடந்த ஒரு மாதமாக, மாவட்ட நிர்வாகம் சார்பில் பலதரப்பட்ட பணிகள் நடைபெற்றுவருகின்றன. அதன் ஒரு பகுதியாக, தார் சாலை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்றுவருகிறது.
பொதுமக்களின் போக்குவரத்துக்கு இடையூறாக இல்லாமல் இரவு நேரத்தில் தார் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. மேலும் சுவர் விளம்பரம், வர்ணம் தீட்டுதல் போன்ற பணிகளும் விறுவிறுவென நடைபெற்றுவருகின்றன.
இதையும் படிங்க: சிறுபான்மை மக்களுக்கு தமிழ்நாடு அரசு அரணாக இருக்கும் - பழனிசாமி பேச்சு!