கரூர் மாவட்டத்தில் ஓய்வுபெற்ற சிறப்பு உதவி ஆய்வாளர் சிவாஜி என்பவர் இருசக்கர வாகனத்தில் தமிழ்நாடு முழுவதும் ஆழ்துளை கிணறுக்கு எதிரான விழிப்புணர்வு பரப்புரையை தொடங்கியுள்ளார். அவரது பயணத்தை கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாண்டியராஜன் தொடங்கி வைத்தார்.
தமிழ்நாடு முழுவதும் இருசக்கர வாகனத்தில் ஒலிபெருக்கி, துண்டு பிரசுரங்கள் மூலம் ஆழ்துளை கிணறு மரணத்தை தடுத்திட விழிப்புணர்வு பரப்புரை மேற்கொள்வதாக சிவாஜி கூறினார்.
இந்தப் பயணத்தின் நோக்கம் ஆழ்துளை கிணறு மற்றும் பேரிடர் பற்றி சம்பந்தப்பட்ட வட்டார அலுவலகங்கள் அல்லது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கும் கட்டணமில்லா தொலைபேசி 1077 எண்ணுக்கு தகவல் அளிப்பது குறித்த விவரங்களும் அடங்கி உள்ளது என்றார்.
இதையும் படிங்க...தமிழ்நாட்டில் விற்பனை செய்யப்படும் பால் ஆபத்தானதா?